என் மகன் வருண் காந்திக்கு பாஜக தலைமை சீட் ஒதுக்காததற்கு இதுவே காரணம்... மேனகா காந்தி விளக்கம்

மேனகா காந்தி - வருண் காந்தி
மேனகா காந்தி - வருண் காந்தி

மகன் வருண் காந்தி தனது பிலிபிட் தொகுதியின் வேட்பாளராக, பாஜக தலைமை மறுத்ததன் பின்னணி குறித்து அவரது தாய் மேனகா காந்தி மனம் திறந்திருக்கிறார்.

இந்திரா காந்தியின் மருமகளும் மறைந்த சஞ்செய் காந்தியின் மனைவியுமான மேனகா காந்தி, கணவர் மறைவை அடுத்து நேரு குடும்ப அரசியல் வாரிசுகள் என்ற அடையாளத்திலிருந்து தன்னிச்சையாக விலகினார். காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் களமிறங்கினார். சுயேச்சையாகவும், ஜனதா கட்சி மற்றும் பாஜக வேட்பாளராக நின்று எம்பி, மத்திய அமைச்சர் பதவிகளை அலங்கரித்து வருகிறார். இதன் மூலம் தனது அரசியல் இருப்பை தொடர்ந்து உறுதி செய்து வருகிறார்.

வருண் காந்தி
வருண் காந்தி

தாய் மேனகா காந்தியை தொடர்ந்து அவரது மகன் வருண் காந்தியும் அரசியலில் குதித்தர். தாய் மேனகாவின் பிலிபிட் தொகுதியில் 2009 மற்றும் 2019 தேர்தல்களின் நின்று எம்பியாகி இருக்கிறார். கடந்த தேர்தலில் வென்ற வருண் காந்திக்கு இம்முறை பிலிபிட் தொகுதியில் பாஜக தலைமை சீட் ஒதுக்கவில்லை. வருணுக்கு மாற்றாக ஜிதின் பிரசாத் என்பவருக்கு சீட் ஒதுக்கப்பட்டது. இதனால் வருண் காந்தியை விட மேனகா மிகவும் வருத்தமடைந்தார்.

மகனின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானதில் ஒரு தாயாக வருத்தம் பகிர்ந்தார். வருணுக்கு ஏன் பாஜக சீட் ஒதுக்கவில்லை என்ற கேள்விக்கும் மேனகா தற்போது மனம் திறந்திருக்கிறார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “அரசுக்கு எதிராக சமூக ஊடகத்தில் விமர்சித்து வருண் அதிகம் பதிவிட்டதே அவருக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு காரணம். வேறு காரணம் எதையும் என்னால் அறிய முடியவில்லை. பிலிபிட் தொகுதி வருணுக்கு கிடைக்காமல் போனாலும், அங்கே வருண் தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்வார் என்றே நம்புகிறேன்” எனவும் மேனகா காந்தி தெரிவித்தார்.

தாய் மேனகா காந்தியுடன் வருண் காந்தி
தாய் மேனகா காந்தியுடன் வருண் காந்தி

அதே போன்று பிலிபித் தொகுதி தனக்கு மறுக்கப்பட்டதுமே, தொகுதி மக்களுக்கு திறந்த மடல் எழுதிய வருண் காந்தி, தொகுதியினருக்காக தனது வீட்டின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என்று தெரிவித்தார். ஆனால் பிலிபிட் தொகுதியில் வருண் காந்தி சுயேச்சையாக நிற்பார் என்ற எதிர்பார்ப்புகளை கடைசியில் பொய்யாக்கினார். இதனிடையே பாஜக வேட்பாளராக மேனகா காந்தி போட்டியிடும் சுல்தான்பூர் தொகுதியில், வருண் காந்தி பிரச்சாரத்தில் குதிக்க இருப்பதாகவும் மேனகா உறுதி செய்திருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!

இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!

ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!

லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in