‘பாஜகவினர் என்னையும் அபிஷேக்கையும் கொல்லப் பார்க்கிறார்கள்’ மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு

மம்தா பானர்ஜி - அபிஷேக் பானர்ஜி
மம்தா பானர்ஜி - அபிஷேக் பானர்ஜி

‘பாஜகவினர் என்னையும் எனது மருமகன் அபிஷேக் பானர்ஜியையும் கொல்லப்பார்க்கின்றனர்’ என மம்தா பானர்ஜி இன்று பகீர் குற்றம்சாட்டு ஒன்றை கிளப்பி உள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் அனைத்திலும் அரசியல் தலைவர்களின் ’என்னை எதிர்க்கட்சியினர் கொல்லப் பார்க்கிறார்கள்...’ என்ற கூக்குரலை அதிகம் கேட்க முடிகிறது. கட்சி பேதமின்றி எதிரொலிக்கும் இந்த குரலை இன்றைய தினம், மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியும் எதிரொலித்துள்ளார்.

”பாஜகவினர் தங்களுக்கு எதிராக பேசுபவர்களை கொல்லப் பார்க்கிறார்கள் அல்லது சிறையில் அடைக்கப்பார்க்கிறார்கள். இந்த வகையில் என்னையும், மருமகன் அபிஷேக்கையும் கொல்லப் பார்க்கிறார்கள்” என்று இன்றைய தினம் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி - அபிஷேக் பானர்ஜி
மம்தா பானர்ஜி - அபிஷேக் பானர்ஜி

தனது மருமகன் அபிஷேக் பானர்ஜியை விருந்து என்ற பெயரில் வரவழைத்து, சூழ்ச்சி மூலம் அவரை சுட்டுக்கொல்ல முயற்சித்ததாகவும், கடைசி நேரத்தில் அபிஷேக் சுதாரித்ததில் ஒரு அபாயகர சந்திப்பை தவிர்த்து விட்டதாகவும் மம்தா பானர்ஜி விவரித்திருக்கிறார்.

”ஒரு அப்பாயின்மென்டை அபிஷேக் சுதாரிப்பாய் தவிர்த்ததில் உயிர் பிழைத்திருக்கிறார். இல்லாவிடில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பார். என் மீது வெறுப்பு இருந்தால் என்னை வெடிகுண்டு வைத்து கொல்லலாம். நீங்கள் அபிஷேக்கை கொல்ல முயற்சி செய்தீர்கள். நல்வாய்ப்பாக நாங்கள் சுதாரித்ததில் அவர் இப்போது உயிரோடு இருக்கிறார்” என்று சில தினங்களுக்கு முன்னர் அபிஷேக் பானர்ஜி எதிர்கொண்ட கொலை முயற்சி சம்பவத்தையும் அதன் பின்னால் பாஜகவினர் இருந்ததையும் மம்தா பானர்ஜி விவரித்துள்ளார்.

அபிஷேக் பானர்ஜி கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக, மும்பையை சேர்ந்த ஒருவரை கொல்காத்தா போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர் மகாராஷ்டிரா பிராந்திய அரசியல் கட்சி ஒன்றை சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் ராஜாராம் ரெகே என்றும், அபிஷேக் வீட்டுக்கு வெளியே சந்தேக முறையில் நோட்டமிட்டவர் என்றும் போலீஸார் அடையாளம் கண்டனர்.

மேலும் மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளி டேவிட் ஹெட்லியை, இந்த ரெகே சந்தித்ததும் போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 26/11 தாக்குதல் போன்று ஏதாவது பயங்கரவாதத் தாக்குதலை கொல்கத்தாவில் நடத்த சதி தீட்டப்பட்டிருக்கலாம் என்றும் மேற்கு வங்க போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

"பாஜக என்னையும் அபிஷேக்கையும் குறிவைக்கிறது, நாங்கள் பாதுகாப்பாக இல்லை. ஆனால் காவி கட்சியின் சதிக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். டிஎம்சி தலைவர்கள் மற்றும் மேற்கு வங்க மக்கள் மீதான சதிக்கு எதிராக அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று மம்தா பானர்ஜி கூறினார்.

பின்னர், தனிப்பட்ட புகாரை சற்றுத் தள்ளிவைத்துப் உரையைத் தொடர்ந்த மம்தா பானர்ஜி, பொதுமக்களை முன்னிறுத்தியும் பாஜகவை சாட ஆரம்பித்தார். "மக்கள் வாக்குகளால் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால். மக்களை பயமுறுத்த வேண்டிய அவசியம் என்ன?" என்று அப்போது கேள்வி எழுப்பினார்.

இதையும் வாசிக்கலாமே...


அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!

இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!

ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in