பாலியல் குற்றச்சாட்டு எழுந்த பிறகும் ஏன் ஆளுநர் ராஜினாமா செய்யவில்லை... மறுபடியும் நெருக்கும் மம்தா பானர்ஜி

முதல்வர் மம்தா பானர்ஜி - ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ்
முதல்வர் மம்தா பானர்ஜி - ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ்

’தனக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த பிறகும் தான் ஏன் ராஜினா செய்யமுன்வரவில்லை’ என மேற்கு வங்க ஆளுநர் விளக்குமாறு மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அடுத்த நெருக்கடியை எழுப்பியுள்ளார்.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளும் கட்சிக்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதல் உச்சமடைந்ததில் மேற்கு வங்கம் முக்கியமானது. முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சிக்காலத்தில் ஆளுநர்கள் மாறியபோதும், முதல்வர் - ஆளுநர் மோதல்கள் தணிந்தபாடில்லை. தற்போதைய ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீதான பாலியல் புகார்களை அடுத்து, ராஜ்பவனுக்கும் ஆளும் திரிணமூல் கட்சிக்கும் இடையிலான மோதல் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ்.
ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ்.

ஆளுநர் மீதான பாலியல் புகார்களை முன்வைத்து அவரை முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடி வருகிறார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திலும் இந்த மோதல் எதிரொலித்து வருகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஹூக்ளி வேட்பாளர் ரச்சனா பானர்ஜிக்கு ஆதரவாக இன்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, “அவர் தன்னை யாரென்று நினைத்திருக்கிறார்? அந்த பெண்ணை ஏன் சித்திரவதை செய்ய வேண்டும்? தன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த பிறகு, அவர் ஏன் ராஜினாமா செய்யக்கூடாது என்பதை ஆளுநர் விளக்க வேண்டும்” என்று மம்தா பானர்ஜி ஆளுநருக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

ராஜ்பவனின் ஒப்பந்த பெண் ஊழியர் ஒருவர் கடந்த வாரம் கொல்கத்தா போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நாட்களின் ராஜ்பவன் சிசிடிவி காட்சிகளை மே 9 அன்று ஆளுநரே பொதுவில் திரையிட்டார். ஆனால் ஆளுநர் திருத்தப்பட்ட வீடியோவை மட்டுமே வெளியிட்டதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். தான் முழு காட்சிகளையும் பார்த்ததாகவும் அதன் உள்ளடக்கங்கள் அதிர்ச்சியளிப்பதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

பிரச்சார கூட்டத்தில் மம்தா பானர்ஜி
பிரச்சார கூட்டத்தில் மம்தா பானர்ஜி

”எனக்கு இன்னொரு வீடியோ கிடைத்துள்ளது. அதில் உங்கள் நடத்தை வெட்கக்கேடானது” என்று அடுத்த குண்டை வீசியிருக்கும் மம்தா பானர்ஜி, ”அவர் கவர்னராக இருக்கும் வரை நான் ராஜ்பவனுக்குச் செல்லப்போவதில்லை. அவரைத் தெருக்களிலும் வெளியிடங்களிலும் சந்திப்பதையே நான் விரும்புகிறேன்” என்றும் ஆளுநரை பழித்துள்ளார் மம்தா பானர்ஜி. மக்களவைத் தேர்தல் மத்தியில் எழுந்திருக்கும் முதல்வர் - ஆளுநர் மோதலும், ஆளுநர் மீதேயான பாலியல் குற்றச்சாட்டுகளும் மேற்கு வங்க அரசியல் வட்டாரத்தை மேலும் பரபரப்பில் வைத்துள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!

இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!

ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!

லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in