அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்?... காங்கிரஸ் கட்சியின் முக்கிய அறிவிப்பு!

காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி

உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இருந்து சோனியா காந்தி குடும்பத்தினர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார்களா என்ற கேள்விக்கு காங்கிரஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் ராகுல் காந்தியும், ரேபரேலியில் சோனியா காந்தியும் பாரம்பரியமாக போட்டியிட்டு வரும் காங்கிரஸின் கோட்டைகளாகும்.

அமேதி தொகுதியில் கடந்த தேர்தலில் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார். எனினும் கேரள மாநிலம், வயநாட்டில் அவர் வெற்றி பெற்றார். இந்நிலையில் இந்தத் தேர்தலில் வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. அங்கு இன்னும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் உள்ளது.

ராகுல் காந்தி, சோனியா காந்தி
ராகுல் காந்தி, சோனியா காந்தி

இதேபோல், காங்கிரஸ் குடும்பத்தின் மற்றொரு பாரம்பரிய தொகுதியான ரேபரேலியிலும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் உள்ளது. எனவே, அமேதி, ரேபரேலி காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் யார் என்பது குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனடேவிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், “வேட்பாளர்கள் யார் என்பதை தீர்மானிக்க கட்சியின் தலைவருக்கு (மல்லிகார்ஜுன கார்கே) அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் மறைமுகமாக நடத்தப்படுவதில்லை.

சுப்ரியா ஸ்ரீனடே
சுப்ரியா ஸ்ரீனடே

அவை அனைவருக்கும் தெரியும் வகையில் வெளிப்படையாக நடத்தப்படுகின்றன. வேட்பாளர்கள் அறிவிக்கப்படும்போது உங்களுக்குத் தெரியும். எங்கள் கட்சியில், இதுபோன்ற முடிவுகளை கதவுகளை மூடிக்கொண்டு 2 பேர் முடிவெடுக்கமாட்டார்கள். மத்திய தேர்தல் குழு (சிஇசி) பரிசீலித்து கட்சியின் தலைவரிடம் ஒப்புதல் பெற்று, வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள்” என்று அவர் கூறினார்

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in