இன்னும் தொகுதி பங்கீடு பஞ்சாயத்தே முடியல... மகாராஷ்டிராவில் தப்புமா பாஜகவின் மகாயுதி கூட்டணி?

மகாயுதி கூட்டணி தலைவர்கள்  தேவேந்திர பட்னவீஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார்
மகாயுதி கூட்டணி தலைவர்கள் தேவேந்திர பட்னவீஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார்

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுகள் தொடங்கிவிட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 7 தொகுதிகளில் இழுபறி நீடித்து வருவதால், ஆளும் மகாயுகதி கூட்டணி பிரச்சினைக்கு தீர்வு காணுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் சிவசேனா (ஷிண்டே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார் பிரிவு) ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. முதல்கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் அங்கு இன்னும் தொகுதி பங்கீடு முடிவடையாதது கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல்

மொத்தம் 48 தொகுதிகள் உள்ள மகாராஷ்டிராவில், மகாயுதி கூட்டணியில் தெற்கு மும்பை, மும்பை வடமேற்கு, மும்பை வடக்கு மத்திய, தானே, கல்யாண், பால்கர், நாசிக் ஆகிய 7 தொகுதிகளில் இழுபறி நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக சிவசேனா தரப்பில் பேசுபவர்கள், “ஒவ்வொரு தொகுதியிலும் மகாயுதி கூட்டணியில் குழப்பம் உள்ளது. சிவசேனா பாரம்பரியமாக போட்டியிடும் தானே, கல்யாண், பால்கர், நாசிக் போன்ற தொகுதிகளை பாஜக கேட்பது பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம்
மகாராஷ்டிரா மாநிலம்

எல்லாவற்றுக்கும் மேலாக, மத்திய அமைச்சர் நாராயண் ரானேவுக்கு ரத்னகிரி சிந்துதுர்க் தொகுதி, நவ்னீத் ராணாவுக்கு அமராவதி போன்ற தொகுதிகளை கேட்பதோடு, பாஜக தலைமை கட்டளையிட்டு வேட்பாளர்களை மாற்றுவது போன்றவற்றால் கூட்டணிக்குள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு முக்கியத்துவம் குறைவதையே காட்டுகின்றன.” என்கிறார்கள்.

மகாராஷ்டிராவில் ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 ஆகிய 5 கட்டங்களில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர்களுக்கு இடையூறு... நடிகர் விஜய் மீது போலீஸில் புகார்!

என் மகனுக்கு தர்ற தண்டனை ஒரு பாடமாக இருக்க வேண்டும்... மாணவி கொலை வழக்கில் குற்றவாளியின் தந்தை கதறல்!

நடுவானில் வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்... ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி!

உஷார்... வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்... தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் எல்லையில் நுழைய முயன்ற ட்ரோன்; பிஎஸ்எஃப் அதிரடி நடவடிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in