ஆட்சி மாறினால் மனிதாபிமானம் பார்க்காமல் பழிவாங்குவோம்... அமைச்சர் ரகுபதி ஆவேசம்!

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி

தேர்தல் ஆணையத்தை பாஜக தங்களது கைப்பாவையாக பயன்படுத்திக் கொண்டாலும், இறுதி வெற்றியானது இந்தியா கூட்டணிக்குத்தான். மத்தியில் ஆட்சி மாறும்போது யாரையெல்லாம் பழிவாங்க வேண்டுமோ மனிதாபிமானம் பார்க்காமல் பழிவாங்குவோம் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

சென்னை ஓட்டேரியில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற அமைச்சர் ரகுபதி, பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கிவிட்டு, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”திமுக தலைவர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஓட்டேரி பகுதியில் 1500 மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஒரு தேர்தல் ஆணையர் திடீரென தேர்தலுக்கு முன்பாகவே தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என்பது  கேள்விக்குறியான ஒன்று. உச்ச நீதிமன்ற நீதிபதியும் தேர்தல் ஆணையரின் நியமனத்தில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிற நேரத்திலே அந்த கோரிக்கையை உதாசீனப்படுத்தி விட்டு ஒன்றிய அரசு புதியதாக இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமித்திருப்பதும் கேள்விக்குறியான ஒன்று” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,” தேர்தல் ஆணையத்தை பாஜக தங்களின் கைப்பாவையாக பயன்படுத்துவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஜனநாயகத்தில் அதை நாங்கள் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். ஆனால் இறுதி வெற்றி இந்தியா கூட்டணிக்குத்தான். மத்தியில் ஆட்சி மாறும்போது யாரையெல்லாம் பழிவாங்க வேண்டுமோ மனிதாபிமானம் பார்க்காமல் பழிவாங்குவோம்” என்றார்.

ஆளுநருடன் பொன்முடி
ஆளுநருடன் பொன்முடி

முன்னாள் அமைச்சர் பொன்முடி  பதவியேற்பு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “ முன்னாள் அமைச்சர் பொன்முடி பதவியேற்புக்கு எந்த தடையும் இருக்காது. ஆளுநர் இன்று தான் தமிழகம் திரும்புகிறார். பதவியேற்பதற்கான தேதியை ஆளுநர் கூறுவார் என நம்புகிறோம். ஏதாவது விளக்கங்கள் கேட்டால் நிச்சயமாக சட்டத்துறை உரிய விளக்கங்களை தருவதற்கு எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்க கூடிய நிலையில் பதவியேற்பு விழாவிற்கு எந்த தடையும் இருக்காது.

தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதியை பெற்று ஏற்கெனவே கடிதம் கொடுத்து விட்டோம்.  தேர்தல் தேதி அறிவித்து விட்டால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துவிட்டு பதவி ஏற்பு செய்ய வேண்டும். ஆளுநர் டெல்லியில் வேண்டுமென்று இரண்டு நாட்கள் உட்கார்ந்திருக்கிறார் என்பது எல்லாருக்கும் தெரியும். இதனால் எந்த பாதிப்பும் மக்களுக்கு கிடையாது. பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டியதுதான்ஆளுநருடைய கடமை. எனவே முன்னாள் அமைச்சர் பொன்முடி பதவி ஏற்பதில் எந்த தடையும் கிடையாது” என்று அமைச்சர் ரகுபதி கூறினார்

இதையும் வாசிக்கலாமே...

மும்பையில் நாளை இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்... முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்!

மக்களவையில் விவாதங்கள் மற்றும் கேள்விகள் கிளப்பியதில்... தமிழக எம்பிக்களின் ஸ்கோர்கார்டு இதுதான்!

குட் நியூஸ்... 60 நாட்களுக்கு முன்பே அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யலாம்!

மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை பிரதமர் மோடி நடத்துகிறார்... ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு!

நடிகர் மன்சூர் அலிகான் தலைவர் பதவியில் இருந்து நீக்கம்... இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in