பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து... மன்னிப்பு கேட்டார் முன்னாள் முதல்வர்!

எச்.டி.குமாரசாமி
எச்.டி.குமாரசாமி

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறியதாக கண்டனங்கள் வலுத்த நிலையில், கர்நாடகா முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி மன்னிப்பு கோரினார்.

கர்நாடகா முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கட்சியின் தலைவருமானவர் எச்.டி.குமாரசாமி. முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகனான இவர் கடந்த சனிக்கிழமை துமகூருவில் தேர்தல் பிரச்சார பேரணி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “காங்கிரஸ் கட்சி உத்தரவாதத் திட்டங்களைச் செயல்படுத்திய பிறகு, கிராமங்களில் உள்ள நமது தாய்மார்கள் சிலர் வழி தவறிவிட்டனர்” என்றார்.

குமாரசாமியின் இந்த பேச்சு பெண்களை அவமானப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது. மேலும், அம்மாநில மகிளா காங்கிரஸ் உறுப்பினர்கள், குமாரசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறுகையில், “குமாரசாமியின் கருத்து அவரது மனநிலையின் பிரதிபலிப்பு" என்றார்.

டி.கே.சிவகுமார், சித்தராமையா
டி.கே.சிவகுமார், சித்தராமையா

இதேபோல், துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், "குமாரசாமியின் கருத்துக்கள் பெண்களுக்கு பெரிய அவமானம்" என்றார்.

குமாரசாமிக்கு எதிராக அடுத்தடுத்து கண்டனங்கள் கிளம்பியதால், அவர் தற்போது தனது பேச்சுக்காக மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று கூறுகையில், “ எனது வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் அனைத்து பெண்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன். எனது வார்த்தைகள் எந்தப் பெண்ணையும் காயப்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல. நான் காங்கிரஸின் உத்தரவாதங்களைப் பற்றி குறிப்பிட்டேன்.

உத்தரவாதங்கள் காரணமாக காங்கிரஸுக்கு வாக்களித்து தவறான பாதையில் செல்லக்கூடாது என்று மாநிலத்தில் உள்ள எனது தாய்மார்கள் அனைவருக்கும் தெரிவிக்க முயன்றேன்.

ஜேடிஎஸ், காங்கிரஸ்
ஜேடிஎஸ், காங்கிரஸ்

பாஜகவின் ஹேமமாலினி, நடிகை கங்கனா ரனாவத் ஆகியோர் மீது காங்கிரஸ் தலைவர்கள் ஆபாசமாக விமர்சித்தனர். அதுபற்றி டி.கே.சிவகுமார் என்ன சொல்கிறார்?” என்றார். எச்.டி.குமாரசாமி, கர்நாடகாவின் மாண்டியா மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் சார்பில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...   

அடேங்கப்பா ரூ.4,650 கோடி பறிமுதல்... முதற்கட்ட தேர்தலுக்கு முன்பே அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்!

அதிர்ச்சி... அம்பேத்கர் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர் வெட்டிக்கொலை!

பிரதமர் மோடியை பார்க்கச் சென்றவர் உயிரிழப்பு... பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி பலி!

டயர் வெடித்து தலைகீழாக கவிழ்ந்த மணல் லாரி... மணலில் புதைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

ஒபாமாவே அஞ்சு வருஷம் தான்... இடத்தை காலி பண்ணுங்க மோடி... முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஆவேசம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in