நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ்
நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ்

பிரபல நடிகரைப் பார்த்து கலங்கிய ரசிகர்கள்... வயோதிகத்திலும் வாக்களிக்க வந்தவருக்கு குவியும் லைக்குகள்

தெலங்கானா மாநிலத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வந்த பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவின் நிலையைக் கண்டு ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். ஏராளமான திரைப்படங்களில் வில்லனாகவும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர நடிகராகவும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீனிவாச ராவ். அவரது தனித்துவமான சிரிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் இருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்க்கப்படும் படங்களில் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வந்துள்ளார் என்பது கோட்டா ஸ்ரீனிவாச ராவ் குறித்து பலருக்கும் தெரியாத தகவல். தற்போது 81 வயதாகும் கோட்டா ஸ்ரீனிவாச ராவ், கடந்த சில மாதங்களாகவே உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். இதனிடையே தெலங்கானா மாநிலத்தில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஐதராபாத் மக்களவைத் தொகுதியில் வசித்து வரும் ஸ்ரீனிவாசராவ் இன்று தனது வாக்கினை செலுத்துவதற்காக ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை தந்தார்.

நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ்
நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ்

மனைவி மற்றும் உதவியாளர் ஒருவருடன் வருகை தந்த அவருக்கு, வாக்குச்சாவடிக்குள் அமர இருக்கைகள் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் தனது வாக்கினை செலுத்தினார். கம்பீரமான வில்லனாக பல திரைப்படங்களில் மிரட்டிய கோட்டா ஸ்ரீனிவாச ராவ், உடல் தளர்ந்து, வயோதிகம் காரணமாக நடந்து வந்ததை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த தள்ளாத வயதிலும் வாக்களிக்க வேண்டும் என்ற அவரது உறுதியை அவர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


இன்று முதல் 3 நாட்களுக்கு கன மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பெலிக்ஸ் ஜெரால்டு எங்கே?! கண்டுபிடித்துத் தருமாறு மனைவி காவல்துறையில் மனு!

பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து... பல லட்ச ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்!

ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு தகவல்... பள்ளிக்கல்வித்துறை புதிய அப்டேட்ஸ்!

16,500 கோடி பயிர்க் கடன்... இந்த ஆண்டுக்கு இலக்கு நிர்ணயித்தது கூட்டுறவுத் துறை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in