கேஜ்ரிவால் ஏன் விசாரணை நீதிமன்றத்தை அணுகவில்லை?... உச்ச நீதிமன்றம் கேள்வி!

அமலாக்கத்துறையினர் பிடியில் அர்விந்த் கேஜ்ரிவால்
அமலாக்கத்துறையினர் பிடியில் அர்விந்த் கேஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஜாமீனுக்காக ஏன் விசாரணை நீதிமன்றத்தை அணுகவில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

டெல்லி கலால் கொள்கை தொடர்புடைய சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியது. இந்நிலையில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்வதிலிருந்து சட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் வேண்டும் என கேஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இதையடுத்து கடந்த மார்ச் 21ம் தேதி அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த 9ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், கேஜ்ரிவால் தொடர்ச்சியாக சம்மன்களை நிராகரித்ததைத் தொடர்ந்து அமலாக்கத் துறைக்கு கைது செய்வதை தவிர வேறு வழியில்லை என நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில் தனது கைது நடவடிக்கையை எதிர்த்து, கேஜ்ரிவால், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் ஜாமீன் கோரி அர்விந்த் கேஜ்ரிவால் ஏன் விசாரணை நீதிமன்றத்தை அணுகவில்லை என கேள்வி எழுப்பினர்.

அமலாக்கத் துறை
அமலாக்கத் துறை

அப்போது கேஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, கேஜ்ரிவால் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது. இதற்கு பல காரணங்கள் உள்ளன என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், “இடைக்கால ஜாமீன் மறுப்பு அல்லது பதில் அளிக்காதது ஆகியவை கைது செய்ய அடிப்படையாக இருக்க முடியாது. சிபிஐ அழைத்ததும் சென்றார். அமலாக்கத் துறை நோட்டீஸ்களுக்கு விரிவாகப் பதிலளித்தார். எனவே, நாங்கள் வரவில்லை என கூறி, நீங்கள் கைது செய்ய முடியாது" என்றார். இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in