கட்சியின் சின்னம் கார்; முதல்வர் வேட்பாளருக்கு சொந்தமாக கார் கூட இல்லை

கே.சந்திரசேகர் ராவ்
கே.சந்திரசேகர் ராவ்

தெலங்கானா முதல்வரும் பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர் கார் சின்னத்தில் வாக்கு கேட்கப்போகிறார். ஆனால் தனது வேட்புமனுவில் சொந்தமாக கார் கூட இல்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

கெஜ்வால் தொகுதியில் போட்டியிடும் கேசிஆர், வேட்பு மனுவில் தன்னை விவசாயி என விளித்திருக்கிறார். 53 ஏக்கர் நிலம் வைத்திருப்பதாகவும், 7 டிராக்டர்கள் உட்பட விவசாயத் தேவைக்கான 14 வாகனங்கள் வைத்திருப்பதாக தெரிவித்திருக்கும் கேசிஆர், சொந்தமாக கார் இல்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

கே.சந்திரசேகர் ராவ்
கே.சந்திரசேகர் ராவ்

விவசாயத்தின் மூலமாக ஆண்டு வருமானமாக ரூ1.44 ஈட்டுவதாக தெரிவித்திருக்கிறார். பசுமைக்குடில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருளைக்கிழங்கு, பாகற்காய் மற்றும் சுரைக்காய் ஆகியவற்றை பயிரிடுவதாக கேசிஆர் தெரிவித்திருக்கிறார். விவசாய ஆர்வத்தில் பல்வேறு கிராமங்களில் கடந்த 5 ஆண்டுகளில் வயல்களை வாங்கி அதில் நவீன விவசாயம் செய்திருக்கிறார்.

வங்கி டெபாசிட் தொகையாக ரூ11.63 கோடியை குறிப்பிட்டுள்ளார். இது 2018 தேர்தலில் கேசிஆர் காட்டிய தொகையைவிட இருமடங்காகும். கேசிஆரின் மனைவி ஷோபா பெயரிலான அசையும் சொத்துக்கள் 2018-ல் ரூ.94.59 லட்சமாக இருந்தது, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.6.29 கோடியாக தற்போது உயர்ந்துள்ளது.

கே.சந்திரசேகர் ராவ்
கே.சந்திரசேகர் ராவ்

கேசிஆர் மீது ஒன்பது வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவை அனைத்தும் தெலங்கானா மாநில போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்டவை என அவர் தெரிவித்துள்ளர். எந்த கிரிமினல் குற்றத்திற்காகவும் தான் தண்டிக்கப்படவில்லை என்றும் கேசிஆர் குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தையும் விட கார் சின்னத்தில் நிற்பவர்; கார் வாங்குவதற்கான வசதி உடையவர்; சொந்தமாக கார் இல்லை என குறிப்பிட்டிருப்பது சமூக ஊடகங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!

வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஐயப்பனுக்கு தங்க அங்கி..  சபரிமலையில் இன்று நடை திறப்பு!

ரூ.25,00,000 பரிசுத் தொகையை... தான் படித்த கல்லூரிகளுக்கு பிரித்துக் கொடுத்த வீரமுத்துவேல்... குவியும் பாராட்டுக்கள்!

செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in