அடுத்தடுத்து சர்ச்சை: பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை கிருஷ்ணருடன் ஒப்பிட்ட கர்நாடக அமைச்சர்!

கர்நாடகா அமைச்சர் ராமப்பா திம்மாபூர்
கர்நாடகா அமைச்சர் ராமப்பா திம்மாபூர்

பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்பி- பிரஜ்வல் ரேவண்ணாவை, பகவான் கிருஷ்ணருடன் ஒப்பிட்டு கர்நாடக அமைச்சர் ராமப்பா திம்மாபூர் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் ஹாசன் தொகுதியின் தற்போதைய எம்பி-யாக உள்ளார். மேலும், தற்போதைய மக்களவைத் தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அவற்றை வீடியோ பதிவு செய்த விவகாரம் வெளியாகி, கர்நாடகா அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

எம்பி- பிரஜ்வல் ரேவண்ணா
எம்பி- பிரஜ்வல் ரேவண்ணா

மேலும் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் லீலைகள் அடங்கிய பென் டிரைவ்களை, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வெளியிட்டதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் குற்றம் சாட்டியுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில் அம்மாநில கலால் துறை அமைச்சர் ராமப்பா திம்மாபூர், பிரஜ்வால் ரேவண்ணாவை, பகவான் கிருஷ்ணருடன் ஒப்பிட்டு பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

விஜயபுராவில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ராமப்பா திம்மாபூர் பேசுகையில், “இந்த பெண்ட்ரைவ் பிரச்சினை போல நாட்டில் மோசமாக எதுவும் இல்லை. இது கின்னஸ் உலக சாதனையை உருவாக்கக்கூடும். ஸ்ரீ கிருஷ்ணர் பல பெண்களுடன் பக்தியுடன் வாழ்ந்தார். பிரஜ்வலின் விஷயம் அப்படி இல்லை. அவர் அந்த சாதனையை முறியடிக்க விரும்புகிறார் என்று நினைக்கிறேன்” என்றார்.

பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் விவகாரத்தை பகவான் கிருஷ்ணருடன் அமைச்சர் ராமப்பா திம்மாபூர் ஒப்பிட்டு பேசிய விவகாரம் கர்நாடகாவில் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அமைச்சர் ராமப்பா திம்மாபூர்
அமைச்சர் ராமப்பா திம்மாபூர்

இது தொடர்பாக பாஜக தலைவரும், கர்நாடகா முன்னாள் அமைச்சருமான சி.டி.ரவி கூறுகையில், “கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணரை அவமதித்துள்ளார். அவரை உடனடியாக அமைச்சரவையிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்க வேண்டும். இல்லையெனில் அவருக்கு எதிராக நாங்கள் போராடுவோம்" என்றார்.

இதற்கிடையே காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனடே கூறுகையில், "இந்த கருத்தை நான் கண்டிக்கிறேன். இந்த கருத்திலிருந்து என்னை விலக்கிக் கொள்கிறேன். இது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல. ரேவண்ணா ஒரு அரக்கன். இது கட்சியின் நிலைப்பாடு அல்ல "என்று தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ஆளுநர் மீது இளம்பெண் பாலியல் புகார்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வைத் தவற விட்டவர்களுக்கு குட்நியூஸ்... 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு விரைவில் துணைத்தேர்வு!

நடுரோட்டில் ஓட ஓட விரட்டி மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவன்... பெங்களூருவில் பரபரப்பு!

ஒரே நாளில் 3 பேர் வெயிலில் சுருண்டு விழுந்து உயிரிழப்பு!

வளைகாப்புக்குச் சென்ற போது விபரீதம்... ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in