உச்சநீதிமன்றம் தலையீட்டைத் தொடர்ந்து கர்நாடகாவுக்கு ரூ.3,454 கோடி வறட்சி நிவாரணம்!

கர்நாடகா முதல்வர் சித்தராமையா
கர்நாடகா முதல்வர் சித்தராமையா

உச்சநீதிமன்றம் தலையீட்டைத் தொடர்ந்து கர்நாடகாவுக்கு ரூ.3,454 கோடி வறட்சி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை அம்மாநில முதல்வர் சித்தராமையா உறுதிப்படுத்தியுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் வறட்சியால் நிலவும் நெருக்கடி நிலைமையை சமாளிக்க, தேசிய பேரிடர் மீட்பு நிதியை (என்டிஆர்எஃப்) விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அம்மாநில அரசு கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்நிலையில் இந்த மாத துவக்கத்தில் இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் சித்தராமையாவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஒருவரை ஒருவர் சரமாரியாக விமர்சித்தனர்.

முதல்வர் சித்தராமையா கூறுகையில், “மத்திய பாஜக அரசு கர்நாடகா மக்களுக்கு துரோகம், அநீதி இழைக்கிறது" என குற்றம் சாட்டினார்.

இதேபோல், மத்திய அமைச்சர் அமித் ஷா கூறுகையில், “நிவாரண நிதிக்கான பரிந்துரையை அனுப்புவதில் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசு தாமதம் ஏற்படுத்தி வருகிறது" என குற்றம் சாட்டினார்.

நிவாரண நிதி தொடர்பாக கர்நாடகா அரசு, மத்திய அரசு பரஸ்பரம் குற்றம் சாட்டிய வந்த நிலையில், இன்று கர்நாடகாவுக்கு ரூ.3,454 கோடி நிவாரணம் கிடைத்துள்ளதாக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய வரலாற்றில் ஒரு மாநிலம் தனது உரிமைகளை நிறைவேற்ற கோரி, உச்ச நீதிமன்றத்துக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டது இதுவே முதல் முறை.

வறட்சி
வறட்சி

உச்சநீதிமன்றம் மணி அடித்த பிறகு கடைசியாக உள்துறை அமைச்சர் எழுந்து கொண்டார். வறட்சி நிவாரண நிதியை பெற்றுத் தந்த உச்சநீதிமன்றத்துக்கு நன்றி. இருப்பினும் மாநில அரசு ரூ.18172 ஆயிரம் கோடி நிதி கோரியது. ஆனால் அவர்கள் (மத்திய அரசு) 3,454 கோடி மட்டுமே நிதி வழங்கியுள்ளனர். இந்த தொகை போதுமானதாக இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ஹாட்ரிக் வெற்றி... உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கப் பதக்கங்கள்!

700 ஹெக்டேர் நாசம்; நைனிடால் நகரை நெருங்கியது காட்டுத் தீ: இந்திய ராணுவம் விரைந்தது!

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி 8 வயது சிறுமி மரணம்... வீட்டில் தனியாக இருந்தபோது விபரீதம்

ஆமாம்... தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து இருக்கிறது... இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி!

தனியார் கம்பெனியின் ஆசிட் தொட்டியில் விழுந்து தொழிலாளி மரணம்... சென்னை அருகே சோகம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in