தூத்துக்குடியில் மீண்டும் போட்டியா... கனிமொழி எம்.பி., சஸ்பென்ஸ் பதில்!

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி., செய்தியாளர் சந்திப்பு
தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி., செய்தியாளர் சந்திப்பு

நான் மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போடியிடுவது தொடர்பாக முதலமைச்சரைத் தவிர வேறு யாரும் முடிவு செய்ய முடியாது என திமுக எம்பி-யான கனிமொழி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, உத்தேச தேதியை வெளியிட்டு தேர்தல் ஆணையம் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதே போல் அரசியல் கட்சியிகளும் கூட்டணிகளை இறுதி செய்வது, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, நிர்வாகிகள் நியமனம் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றில் அக்கறை காட்டி வருகின்றன.

தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி.,
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி.,

திமுக சார்பில் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைத் தயாரிக்க கனிமொழி எம்பி தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ’தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க, ஸ்டாலினின் குரலில் நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்துகள்’ என்ற தலைப்பில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிலதிபர்கள், உப்பள அதிபர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் நேரில் சந்தித்து தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்களை கோரிக்கை மனுவாக பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி., செய்தியாளர் சந்திப்பு
தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி., செய்தியாளர் சந்திப்பு

இதன் ஊடாக இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, “மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த குழு ஒவ்வொரு மாவட்டமாக சென்று அங்குள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் குறைகளை கேட்க உள்ளது. முதற்கட்டமாக இன்று தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்துக் கேட்கிறோம்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உப்புத்தொழில் வளர்ச்சி தொடர்பாகவும், ராமநாதபுரம் பகுதி மக்கள் வற்றல் தொடர்பான கோரிக்கையையும், விருதுநகர் மாவட்டத்தினர் பட்டாசு தொழில் தொடர்பான கருத்துகளையும் தெரிவித்துள்ளனர். தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் இதேபோல் மற்ற மாவட்டங்களுக்கும் பயணம் செய்து மக்களின் கருத்துகளை கேட்டறிந்து அவர்கள் தரும் கோரிக்கைகளை தொகுத்து முதல்வரிடம் அறிக்கையாக சமர்ப்பிப்போம்” என்றார்.

தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”மீண்டும் இந்தத் தொகுதியில் நான் போட்டியிடுவது தொடர்பாக முதலமைச்சரை தவிர வேறு யாராலும் முடிவு செய்ய முடியாது. எனவே, முதல்வர் அறிவித்த பின்பு அந்த தகவல் உறுதிப்படுத்தப்படும்.” என்றார்

இதையும் வாசிக்கலாமே...

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!

'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?

கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!

நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!

நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in