அமித்ஷா தமிழ்நாட்டு பயணத்தை ரத்து செய்தது இதனால்தான்... காரணத்தை சொன்ன கனிமொழி!

அமித்ஷா தமிழ்நாட்டு பயணத்தை ரத்து செய்தது இதனால்தான்... காரணத்தை சொன்ன கனிமொழி!

இப்போதுதான் அமித்ஷா தனது தமிழ்நாட்டு பயணத்தை ஏன் ரத்து செய்தார் என்பது தெரிகிறது. எவ்வளவுதான் முயன்றாலும் தமிழ்நாடு மக்கள் பாஜகவுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இன்று ஏப்ரல் 4ம் தேதியும், நாளையும் தமிழகத்தில் மத்திய அமைச்சர் பிரச்சாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திடீரென அமித்ஷாவின் பயணத்திட்டம் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் இன்று இரவு அமித்ஷா தமிழகம் வருவதாக இருந்தது. ஆனால் அந்த பயணத்திட்டமும் ரத்து செய்யப்பட்டது. இது பாஜகவினரிடையே சலசலப்பை உருவாக்கியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

இந்த நிலையில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்து கனிமொழி கம்பம் பகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “ இங்கு கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது தான் அமித்ஷா ஏன் தனது தமிழ்நாட்டு பயணத்தை ரத்து செய்தார் என தெரிகிறது. பாஜகவிற்கு ஒரு ஓட்டு கூட தேனி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து வராது என்பது நன்கு தெரிகிறது.

தமிழ்நாட்டைக் கண்டாலே அவர்களுக்குப் பிடிப்பதில்லை. நமது தமிழகத்திற்கு நமக்கு வரவேண்டிய நிதியும் வராது, ஒரு ரூபாய் நிதி கொடுத்தால் 29 பைசா தமிழ்நாட்டிற்கு திருப்பித் தருகிறார்கள். மழை, வெள்ளம் வந்தால் நிவாரணம் கூட வராது. அவர்கள் ஆட்சியில் எந்த திட்டமும் வராது. நம் கஷ்டப்பட்டபோது ஒருமுறை கூட பிரதமர் மோடி வந்து எட்டிப்பார்க்கவில்லை. இப்போது தேர்தல் என்பதால் மாதத்திற்கு 8 நாட்கள் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் தான் உள்ளார். அடுத்த வாரம் கூட பிரதமர் மீண்டும் தமிழ்நாடு வர உள்ளார்.

கனிமொழி பிரச்சாரம்
கனிமொழி பிரச்சாரம்

மக்களிடையே மத ரீதியாக, இன ரீதியாக பிரிவினையை ஏற்படுத்தி பிரச்சினையை ஏற்படுத்துவது பாஜக தான். உலகம் முழுவதும் சுற்றும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டை எட்டி கூட பார்க்காத பிரதமர் மோடி, இப்போது தேர்தல் வந்ததும் தமிழ்நாட்டை சுற்றி சுற்றி வருகிறார். டிடிவி தினகரன் மீது வழக்குகள் உள்ளதால் தான், அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை இவை எல்லாம் தான் பிரதமர் மோடியின் குடும்பம். பிரதமர் மோடி எவ்வளவுதான் முயன்றாலும், தமிழ்நாடு மக்கள் பாஜகவுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்

இதையும் வாசிக்கலாமே...   

கார் விபத்தில் சிக்கிய அஜித்... ’விடாமுயற்சி’க்காக உயிரை பணயம் வைத்து ரிஸ்க்; வைரல் வீடியோ!

சமுதாயத்தில் 60 சதவீதம் பேர் கெட்டவர்கள் தான்... இயக்குநர் ஹரி பரபர பேச்சு!

ஜஸ்ட் மிஸ்... பிரச்சாரத்தின் போது மாட்டுவண்டியில் இருந்து தவறி விழுந்த தேமுதிக வேட்பாளர்!

விஷத்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்ட தம்பதி.. காருக்குள் இறந்து கிடந்த மனைவி!

மனைவி டார்ச்சர் தாங்கல... விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற மாஸ்டர் செஃப் பிரபலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in