கமல்ஹாசனுக்கு மீண்டும் டார்ச்லைட் சின்னம் - மநீமவுக்கு ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம்!

கமல்ஹாசன் டார்ச்லைட்
கமல்ஹாசன் டார்ச்லைட்

வரும் மக்களவைத் தேர்தலுக்காக நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் கமல் ஹாசன் கடந்த 2018 ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். 2019 ம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் தனித்துப்போட்டியிட்ட அவரின் கட்சி எந்த தொகுதியிலும் வெல்லவில்லை. 2021 சட்டசபை தேர்தலில் சில சிறிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலிலும் தோல்வியை தழுவியது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

இந்நிலையில் தான் விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் மக்கள் நீதி மய்யம் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது.

கமல்ஹாசன் டார்ச்லைட்
கமல்ஹாசன் டார்ச்லைட்

இதுதொடர்பான கடிதத்தில், கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டசபை தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிட்டது. அதேபோல் இந்த முறையும் கட்சிக்கு டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

6 மாதங்களுக்கான உணவுப்பொருள், டீசல் உடன் குவியும் விவசாயிகள்; தேர்தல் நெருக்கத்தில் கோரிக்கைகள் ஈடேறுமா?

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்... உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது: கார்கே விளாசல்!

வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!

பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in