ஓபிஎஸ் ஓட்டும் அதிமுகவுக்குத் தான்... ஜெயக்குமார் கலகல பேட்டி!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ்சுக்கு செல்வாக்கு கிடையாது. அவரது ஓட்டும் அதிமுகவுக்குதான் கிடைக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் ஏப்.19-ம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வடசென்னை தொகுதியில் அதிமுக சார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓட்டேரி பகுதியில் இன்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேசிய கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் வளர்ச்சி இல்லை. பாஜகவினர் பிரதமர் நரேந்திர மோடியை முன்னிறுத்துகிறார்கள், வட மாநிலம் வளர்ச்சியடைந்து விட்டதா? காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் வளர்ச்சி அடைந்து விட்டதா?” என்று கேள்வி எழுப்பினார்.

அவரிடம், இபிஎஸ் தலைமையிலான அதிமுக, மக்களவை தேர்தலுக்குப் பின் காணாமல் போய்விடும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “பாஜகவின் தலைவராக ஓபிஎஸ் இருப்பார். அதன் பொதுச் செயலாளராக டி.டி.வி. தினகரன் இருப்பார். ஆனால், அண்ணாமலை காணாமல் போய்விடுவார்” என்று பதிலளித்த ஜெயக்குமார், 2026-ம் ஆண்டு பாமக தலைமையில் ஆட்சி என்று அன்புமணி கூறியது, இந்த நூற்றாண்டின் சிறந்த காமெடி. அனைவரையும் சிரிக்க வைக்கக் கூடியது.

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ்சுக்கு செல்வாக்கு கிடையாது. அவரது ஓட்டு அதிமுகவுக்குதான் கிடைக்கும். பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்த விட மாட்டோம். பாஜக எத்தனை முறை ரோடு ஷோ நடத்தினாலும் அவர்களுக்கு வாக்கு வங்கி அதிகரிக்காது. பாஜகவின் தேர்தல் அறிக்கை காகிதப்பூ. அது மலர் ஆகாது” என்று விமர்சனம் செய்தார்.

இதையும் வாசிக்கலாமே...

 சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in