ராகுல் காந்தி அரசியலுக்கு லாயக்கில்லை; அவரிடம் வேறு திறமை இருக்கலாம்... கங்கனா ரனாவத் கருத்து!

ராகுல் காந்தி, கங்கனா ரனாவத்
ராகுல் காந்தி, கங்கனா ரனாவத்

இன்னும் சில ஆண்டுகளில் 60 வயதை நெருங்குபவர் இளம் தலைவரா என ராகுல் காந்திக்கு எதிராக பாஜக வேட்பாளரும், பிரபல நடிகையுமான கங்கனா ரனாவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கங்கனா ரனாவத்
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கங்கனா ரனாவத்

பிரபல நடிகை கங்கனா ரனாவத், இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர். பாஜகவின் தீவிர ஆதரவாளரான இவர் சமூக வலைதளங்கள் மற்றும் பொதுத்தளத்தில் அக்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் வரவிருக்கும் மக்களவைத் தொகுதியில் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக கங்கனா ரனாவத் களமிறக்கி விடப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் கடந்த சில நாள்களாக தனது தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், பிரபல ஹிந்தி சேனல் நேர்காணல் நிகழ்ச்சியில் கங்கனா ரனாவத் பங்கேற்றோர். அப்போது அரசியல் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ”ராகுல் காந்தியின் விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி அவரை அரசியல்வாதியாக மாற்றியுள்ளனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் கங்கனா ரணாவத்
தேர்தல் பிரச்சாரத்தில் கங்கனா ரணாவத்

அந்தப் பணியை அவரால் செய்ய முடியுமா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அவர் மீண்டும் மீண்டும் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படுகிறார். இன்னும் சில ஆண்டுகளில் அவர் 60 வயதை எட்டிவிடுவார். ஆனாலும், மீண்டும் மீண்டும், அவர் (ராகுல் காந்தி) ஒரு ‘இளம் தலைவர்’ என அறிமுகப்படுத்தப்படுகிறார்.

அவர் சொந்த சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர் என நினைக்கிறேன். குழந்தைகள் வாரிசு முறைக்கு பலியாகின்றனர். உதாரணமாக, அவர் வேறு ஏதாவது செய்ய விரும்பினால், ஒரு நடிகராக விரும்பினால் என்ன செய்வது? அவர் ஒரு நடிகராக இருக்கலாம். திரைப்படத் துறையில், (துறைக்குள் வருமாறு) பெற்றோர்களால் அழுத்தம் கொடுக்கப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி

அத்தகையவர்களின் வாழ்க்கை பாழாகிவிட்டது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி... இருவரையும் எனக்குப் பிடிக்கும். அவர்கள் வாழ்க்கையை தொந்தரவு செய்வது போல் தெரிகிறது. அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தகுதியானவர்கள். இப்போதுகூட தாமதமாகிவிடவில்லை. அவர்களின் தாயார் (சோனியா காந்தி) அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...  

குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

அதிர்ச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணி தீவிரம்!

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்... மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை!

வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது... பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு!

தம்பி அண்ணாமலை, மோதிப் பார்ப்போமா?... சவால் விட்ட சீமான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in