வாக்களிக்காதவர்களுக்கு வரியை அதிகரிக்க வேண்டும்... நடிகர் பரேஷ் ராவல் ஆவேசம்!

பரேஷ் ராவல்
பரேஷ் ராவல்
Updated on
2 min read

வாக்களிக்காதவர்களுக்கு வரி அதிகரிப்பு அல்லது வேறு சில தண்டனைகள் போன்ற சில ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என்று நடிகர் பரேஷ் ராவல் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், மூத்த பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் மும்பையில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று காலை வாக்களித்தார்.

வாக்களித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய பரேஷ் ராவல், "அரசாங்கம் இதைச் செய்யாது, அதைச் செய்யாது என்று நீங்கள் சொல்வீர்கள். இன்று நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால், நீங்கள்தான் பொறுப்பு, அரசாங்கம் அல்ல. மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை சரியாக செய்யவேண்டும். வாக்களிக்காதவர்களுக்கு வரி அதிகரிப்பு அல்லது வேறு சில தண்டனைகள் போன்ற சில ஏற்பாடுகள் இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

பரேஷ் ராவல்
பரேஷ் ராவல்

மும்பையில் உள்ள மும்பை வடக்கு, மும்பை வடமேற்கு, மும்பை வடகிழக்கு, மும்பை வடக்கு மத்திய, மும்பை தெற்கு, மும்பை தெற்கு மத்திய ஆகிய 6 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று 5ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பீகாரில் உள்ள 5 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 13 தொகுதிகள், ஒடிசாவில் 5 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 49 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

சென்னை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

பெட்ரோல் பங்கில் லாரியின் டீசல் டேங்க் வெடித்து பெரும் தீ விபத்து; வைரலாகும் வீடியோ!

ஈரான் அதிபர் விபத்தில் பலி... அதிகாரப்பூர்வ அறிவிப்பு... பட்டாசுகள் வெடித்து கொண்டாடிய மக்கள்!

3,000க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தம்... 4வது நாளாக 20,000 தொழிலாளர்கள் வேலை இழப்பு!

குற்றால வெள்ளத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி. கொள்ளுப் பேரன்; வெளியான அதிர்ச்சித் தகவல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in