வங்கிக் கணக்குகள் முடக்கம்: ம.பி.யில் காங்கிரஸ் 'ஒரு நோட்டு, ஒரு ஓட்டு' பிரசாரம்

மத்திய பிரதேசத்தில் பிரச்சாரத்தின்போது வாக்காளர்களிடம் நன்கொடை கோரும் காங்கிரஸ்
மத்திய பிரதேசத்தில் பிரச்சாரத்தின்போது வாக்காளர்களிடம் நன்கொடை கோரும் காங்கிரஸ்

வருமான வரித் துறையால் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால், மத்தியப் பிரதேசத்தில் அக்கட்சி 'ஒரு நோட்டு, ஒரு ஓட்டு' பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

வருமான வரித்துறை, காங்கிரஸ்
வருமான வரித்துறை, காங்கிரஸ்

கடந்த 1993-94 நிதியாண்டு மற்றும் 2016 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வருமான வரி கணக்கில் கண்டறியப்பட்டுள்ள தவறுக்காக வரி நிலுவை, அபராதம் என அக்கட்சி மொத்தம் ரூ.3,567 கோடி செலுத்த வேண்டும் என கோரி வருமான வரித் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதோடு, வருமான வரித் துறை, காங்கிரஸ் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.135 கோடியை எடுத்துக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பட்வாரி
மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பட்வாரி

தேர்தல் நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குவது மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது ஆகியவற்றின் மூலம் நாட்டில் ஜனநாயகத்தை பாஜக சிதைத்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பான இந்தியா கூட்டணி சார்பில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று கண்டன பேரணியும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால், தேர்தல் செலவை எதிர்கொள்ள மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 'ஒரு நோட்டு, ஒரு ஓட்டு' பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பட்வாரி கூறுகையில், “தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு வங்கிக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கை, கட்சியை நிதி ரீதியாக பலவீனப்படுத்தி தேர்தலில் தோற்கடிப்பதை நோக்கமாகக் கொண்டது" என்றார்.

காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி

போபால், ஜபல்பூர் காங்கிரஸ் வேட்பாளர்களான அருண் ஸ்ரீவஸ்தவா, தினேஷ் யாதவ் ஆகியோர் தங்கள் கைகளில் பெட்டிகளுடன் பிரச்சாரத்துக்கு செல்கின்றனர். அவர்கள் மக்களிடம் வாக்கு கேட்கும் அதே வேளையில், தேர்தல் செலவுக்கு பெட்டியில் ஒரு ரூபாய் போடுமாறு கேட்கின்றனர். இதேபோல், மத்தியப் பிரதேசத்தின் பிற தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இதேபோன்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...    

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது... மாதத்தின் முதல் நாளில் மகிழ்ச்சி!

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு... புதிய நிதி ஆண்டு இன்று தொடக்கம்!

தமிழக பாஜக அலுவலகம் குற்றவாளிகளின் சரணாலயம்... அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்குதல்!

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்... ஏப்ரல் 9-ம் தேதி சென்னை வருகிறார்!

ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்... ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in