மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மு.க.ஸ்டாலின் சிறைக்கு அனுப்பப்படுவார்... பகீர் கிளப்பிய கேஜ்ரிவால்!

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், முதல்வர்கள் மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.

டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று விடுதலையான நிலையில், இன்று முதன் முறையாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

நான் சிறையில் இருந்து 50 நாட்களுக்குப் பிறகு நேராக உங்களைப் பார்க்க வருகிறேன். இப்போதுதான் அனுமன் கோவிலுக்குச் சென்றேன். அனுமனின் ஆசீர்வாதம் எங்கள் கட்சிக்கு உள்ளது. அனுமன் அருளால்தான் நான் இன்று உங்கள் மத்தியில் இருக்கிறேன்.

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

எங்கள் ஆம் ஆத்மி கட்சி ஒரு சிறிய கட்சி, நாங்கள் இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறோம். ஆனால், பிரதமர் எங்கள் கட்சியை நசுக்குவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார். ஒரே நேரத்தில் கட்சியின் நான்கு முக்கிய தலைவர்கள் சிறைக்கு அனுப்பினால் கட்சியே முடிந்துவிடும் என்று பிரதமர் நினைக்கிறார். ஏனென்றால் ஆம் ஆத்மி கட்சிதான் நாட்டிற்கு எதிர்காலத்தைத் தரும் என்பதைப் பிரதமர் மோடியே உணர்ந்துள்ளார்

நமது நாடு மிகவும் பழமையானது, இங்கே ஒரு சர்வாதிகாரி ஆட்சியைக் கைப்பற்ற முயன்ற போதெல்லாம், மக்கள் அவரை வேரோடு பிடுங்கினார்கள். இன்று மீண்டும் ஒரு சர்வாதிகாரி ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார். இதனால் நான் 140 கோடி மக்களிடம் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.

ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகப் பிரதமர் கூறுகிறார்.. ஆனால் நாட்டில் உள்ள திருடர்கள் எல்லாம் பாஜகவில் தான் உள்ளனர்.10 நாட்களுக்கு முன்பு ஒருவரை ஊழல்வாதி, மோசடிக்காரர் என்கிறார்கள். ஆனால், அந்த நபர் பாஜகவில் இணைந்தால் உடன் அவரை துணை முதல்வராக்கி, அமைச்சர் பதவியும் தருகிறார்கள்.

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சிறைக்கு அனுப்புவார்கள். இது தான் அவர்கள் திட்டம். ஏற்கெனவே நமது அமைச்சர்கள், ஹேமந்த் சோரன், மம்தா பானர்ஜியின் அமைச்சர்கள் சிறையில் உள்ளனர்.

மோடி மீண்டும் வெற்றி பெற்றால், மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ். , பினராயி விஜயன், உத்தவ் தாக்கரே என எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள்.

அவர்கள் தலைவர்களையே கூட கட்டாயப்படுத்தி அரசியலில் இருந்து விலக வைக்கிறார்கள். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சிவராஜ் சிங் சௌஹான், வசுந்தரா ராஜே, மனோகர் லால் கட்டார், ராமன் சிங் ஆகியோரின் அரசியல் முடிந்துவிட்டது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த 2 மாதங்களில் உத்தரப் பிரதேச முதல்வரையும் அவர்கள் மாற்றி விடுவார்கள். எதிர்க்கட்சி தலைவர்களை மட்டுமல்ல, சொந்த கட்சி தலைவர்களையும் பாரதிய ஜனதா கட்சி சிறையில் தள்ளும். "ஒரே தேசம், ஒரே தலைவர்" என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார். அவர் விரைவில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவார்" என அவர் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!

இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!

ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!

லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in