தொண்டையில் வலி இருக்கிறது... தொண்டில் தொய்வு இருக்கக்கூடாது என்பதால் வந்துவிட்டேன் - முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

’’மருத்துவர்கள் இந்த வாரம் முழுக்க ஓய்வு எடுக்க சொன்னார்கள். ஆனால் மக்களை சந்திக்காமல் என்னால் இருக்க முடியவில்லை. தொண்டை வலி இருந்தாலும் தொண்டில் தொய்வு இருக்கக்கூடாது. அதனால்தான் வந்துவிட்டேன்’’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘’கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்தது. தற்போது காய்ச்சல் குறைந்துவிட்டாலும் தொண்டை வலி மட்டும் இருக்கிறது. என்னுடைய குரலைக் கேட்கும் உங்களுக்கு நன்றாக தெரியும்.

இந்த வாரம் முழுவதும் ஓய்வில் இருக்க வேண்டுமென என்னுடைய மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தாலும் என்னால் மக்களை சந்திக்காமல் இருக்க முடியாது. தொண்டை வலி இருந்தாலும் தொண்டில் தொய்வு இருக்கக்கூடாது என்பதற்காக உங்களையெல்லாம் பார்க்க வந்துவிட்டேன். உங்களை எல்லாம் பார்க்கும் போது உடல் வலி குறைந்து மகிழ்ச்சி அதிகரித்துள்ளது.

தேர்தலின் போது மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டம் என கூறிய போது இது செயல்படுத்த முடியாத திட்டம் என கூறினார்கள். இவங்க ஆட்சிக்கே வரமாட்டார்கள் என்று கட்டம் எல்லாம் பார்த்தார்கள். ஆனால் நீங்க என்ன சொன்னீங்க, திமுகதான் ஆட்சிக்கு வர வேண்டும் என கூறினீர்கள். கடைசியில் அதுதான் நடந்தது. திமுக சொன்னா நிறைவேற்றும் என ஓட்டுப் போட்டு பதிலடி தந்தீர்கள்.

இந்த முத்துவேல் ஸ்டாலின் சொன்னால் சொன்னதை செய்வேன். இன்று மாலைக்குள் அந்த தொகை உங்கள் அனைவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். தகுதியான மகளிருக்கு இந்த ரூபாய் சென்று சேர வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருந்தது. இதற்கும் சிலர் விமர்சனம் செய்தார்கள். தொடக்கத்தில் இருந்தே சொன்னோம். பாரப்பட்சம் இல்லாமல் தகுதியான மகளிர் மட்டுமே விண்ணப்பித்தார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!

வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஐயப்பனுக்கு தங்க அங்கி..  சபரிமலையில் இன்று நடை திறப்பு!

ரூ.25,00,000 பரிசுத் தொகையை... தான் படித்த கல்லூரிகளுக்கு பிரித்துக் கொடுத்த வீரமுத்துவேல்... குவியும் பாராட்டுக்கள்!

செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in