'மோடி சர்க்கார்' பிரச்சார பாடலுக்கு முதல்வர் ஹிமந்தா சர்மா டான்ஸ்! - வைரலாகும் வீடியோ

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடனமாடிய முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடனமாடிய முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா

அசாம் மாநிலத்தில் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா, 'மோடி சர்க்கார்' பிரச்சாரப் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடினார். அது தொடர்பான வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் முதலமைச்சராக இருப்பவர் ஹிமந்தா பிஸ்வ சர்மா. இவர் முதல்வர் என்பதைத் தாண்டி அவ்வப்போது சர்ச்சையாக பேட்டி கொடுத்தும், கருத்து தெரிவித்தும் வருவதால் மீடியாக்களில் பிரபலமானவர். தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் சர்மா.

ஹிமந்தா பிஸ்வ சர்மா
ஹிமந்தா பிஸ்வ சர்மா

இந்நிலையில் இன்று அம்மாநிலத்தில் நாகானில் அமைந்துள்ள ஜுரியா பகுதியில் பாஜக சார்பில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு முதல்வர் ஹிமந்தா சர்மா ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். மேடைக்குச் செல்லும் வழியில் மக்களிடம் கை குலுக்கினார். பின்னர், பிரச்சாரக் கூட்டத்தில் ஒலிக்கப்பட்ட 'மோடி சர்க்கார்' என்ற பாடலுக்கு பொதுமக்கள் மற்றும் பிற தலைவர்களுடன் இணைந்து ஹிமந்தா சர்மா நடனமாடினார்.

ஹிமந்தா சர்மா நடனமாடுவது இது முதல் முறையல்ல. கடந்த 12-ம் தேதி அசாமின் லக்கிம்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம், கடந்த 6ம் தேதி ஜோர்ஹாட்டில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டங்களிலும் முதல்வர் ஹிமந்தா சர்மா 'மோடி சர்க்கார்' பாடலுக்கு நடனமாடி அசத்தினார். எத்தனை முறை ஆடினாலும் அவரது நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் மொத்தம் 14 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. அடுத்ததாக ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!

இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!

ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in