நெல்லை மேயருக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி... ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதிய திமுக கவுன்சிலர்!

நெல்லை மேயருக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி... ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதிய திமுக கவுன்சிலர்!

நெல்லையில் திமுக மேயர் சரவணனுக்கு எதிராக தனது பதவியை ராஜினாமா செய்வதாக திமுக கவுன்சிலர் சின்னத்தாய் கடிதம் எழுதிய விவகாரம் நெல்லை திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 55 வார்டுகளில் 50 வார்டுகளில் திமுக கூட்டணியும், 4 இடங்களில் அதிமுகவும், ஒரு இடத்தில் சுயேட்சையும் வெற்றி பெற்றனர். இதையடுத்து மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் பதவி வகித்து வருகிறார். துணை மேயராக ராஜு பதவி வகித்து வருகிறார். மேயர் சரவணனுக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு உருவாகி வருகிறது.

நெல்லை மாநகர மேயர் சரவணன்
நெல்லை மாநகர மேயர் சரவணன்

தங்கள் தொகுதிகளுக்கு மேயர் சரவணன் போதுமான நிதி ஒதுக்குவதில்லை எனவும் கவுன்சிலர்கள் முன்வைக்கும் குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் திமுக கவுன்சிலர்களே குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த மோதல் உச்சத்துக்குப் போனதை அடுத்து சரவணன் மீது திமுக கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் அளவுக்கு முஸ்தீபு காட்டினார்கள். ஆனால், திமுக தலைமை தலையிட்டு கவுன்சிலர்களையும் மேயரையும் சமாதானம் செய்து வைத்தது. ஆனாலும் பிரச்சினை ஓய்ந்தபாடில்லை.

36 வது வார்டு கவுன்சிலரான திமுகவைச் சேர்ந்த சின்னத்தாய் என்பவர் மேயரைக் கண்டிக்கும் விதமாக இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக மேயர் சரவணன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சுபம் தாக்கரே ஆகியோருக்கு ஆன்லைன் மூலம் அவர் கடிதம் எழுதியதாகவும் சொல்லப்பட்டது

நெல்லை 36வது வார்டு கவுன்சிலர் சின்னத்தாய்
நெல்லை 36வது வார்டு கவுன்சிலர் சின்னத்தாய்BG

இந்த நிலையில், ராஜினாமா முடிவை ஒத்திவைத்திருப்பதாக சின்னத்தாயின் கணவர் கிருஷ்ணன் தற்போது தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டை எம்எல்ஏ-வான அப்துல் வகாப் இந்த விவகாரம் தொடர்பாக தலைமையிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே கச்சைகட்டுவது நெல்லை மாநகர திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!

இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!

ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in