பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடும் திருநங்கை ஹேமாங்கி சகி யார்?

மகாமண்டலேஸ்வர் ஹேமாங்கி சகி
மகாமண்டலேஸ்வர் ஹேமாங்கி சகி

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து திருநங்கை மகாமண்டலேஸ்வர் ஹேமங்கி சகி போட்டியிடுகிறார். இவர் யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

மகாமண்டலேஸ்வர் ஹேமாங்கி சகி
மகாமண்டலேஸ்வர் ஹேமாங்கி சகி

அகில பாரத மகா இந்து சபையின் வேட்பாளராக போட்டியிடும் மகாமண்டலேஸ்வர் ஹேமாங்கி சகிக்கு வயது 46. குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடாவில் சகி பிறந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது தந்தை, திரைப்பட விநியோகஸ்தர் என்பதால் அவரது குடும்பம் மும்பைக்கு இடம் பெயர்ந்தது. சகி ஒரு கான்வென்ட் பள்ளியில் சிறிது காலம் படித்துள்ளார். அவரது பெற்றோர் இறந்த பிறகு பள்ளி படிப்பை விட்டு வெளியேறியுள்ளார். ஒரு சில படங்களில் சகி நடித்துள்ளார். அத்துடன் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார்.

மகாமண்டலேஸ்வர் ஹேமாங்கி சகி
மகாமண்டலேஸ்வர் ஹேமாங்கி சகி

சகியின் கிருஷ்ண பக்தி, மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் உள்ள இஸ்கான் கோயிலில் தொடங்கி பிருந்தாவனத்தில் முடிந்துள்ளது. இதன் பின்னரே அவர் ஹேமாங்கி சகி மா என்று அறியப்பட்டார்.- பகவத் கீதையின் உலகின் முதல் திருநங்கை ரசிகை என்று அறியப்படும் சகி, பகவத் கீதை, ராமர் கதை மற்றும் தேவி பகவத் கதை ஆகியவற்றை உலகம் முழுவதும் பல இடங்களில் நிகழ்த்தியுள்ளார் என்று அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் (Mahamandaleshwar Hemangi Sakhi Maa) தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆச்சார்யா மஹாமண்டலேஸ்வரராக அவரது முடிசூட்டு விழா நடந்தது. அதில் பாரதிய சாது சமாஜால் பகவத்பூஷன் மகாமண்டலேஸ்வர் என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. உத்தர கோதாவரி தாமில் உள்ள ஆதிஷங்கர் கைலாஷ் பீடத்தால் அவருக்கு ஆச்சார்யா மகாமண்டலேஸ்வர் என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

மகாமண்டலேஸ்வர் ஹேமாங்கி சகி
மகாமண்டலேஸ்வர் ஹேமாங்கி சகி

உத்தரப் பிரதேசத்தின் நிர்மோகி அகாடா என்ற சாதுக்கள் அமைப்பைச் சேர்ந்தவர் தான் இந்த திருநங்கை மகாமண்டலேஸ்வர் ஹேமாங்கி சகி. பிரதமரை எதிர்த்து போட்டியிடுகிறீர்களா என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டதற்கு அவர் சொன்ன பதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிடவில்லை என்பது தான். குழப்பமாக இருக்கிறதா? அதற்கு அவரே பதிலையும் கூறியுள்ளார்.

" திருநங்கைகளின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதற்காக அரசியலில் களமிறங்கியுள்ளேன். திருநங்கைகள் குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை. மேலும் மத்திய அரசு சார்பில் திருநங்கைகள் நலனுக்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதுகுறித்து மத்திய அரசு விளம்பரம் செய்வதில்லை" என்று கூறியுள்ள சகி, " இந்திய சமூகத்தில் திருநங்கைகளும் ஓர் அங்கம். ஆனால், எங்களுக்காக நாட்டில் ஒரு தொகுதிகூட ஒதுக்கப்படவில்லை. எந்தவொரு அரசியல் கட்சியும் திருநங்கைகளை வேட்பாளராக அறிவிப்பது இல்லை என்று புகார் கூறியுள்ளார். அகில இந்திய இந்து மகா சபை என்னை வேட்பாளராக அறிவித்து நாட்டுக்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை இதர கட்சிகளும் பின்பற்ற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...   


லாலுவின் 2 மகள்களுக்கு வாய்ப்பு... பீகாரில் 22 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது ஆர்ஜேடி!

சத்தீஸ்கரில் 50 அடி பள்ளத்திற்குள் பேருந்து கவிழ்ந்து 12 தொழிலாளர்கள் பலி... பிரதமர் மோடி இரங்கல்!

ஈபிஎஸ் நண்பர் வீட்டில் 7 மணி நேரம் ஐ.டி ரெய்டு...2 பெட்டிகளில் ஆவணங்களை அள்ளிச் சென்றனர்!

திருமாவளவன் வீட்டில் ஐ.டி அதிகாரிகள் திடீர் சோதனை...சிதம்பரத்தில் சிறுத்தைகள் குவிந்ததால் பரபரப்பு!

நள்ளிரவில் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு... கோவையில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in