நள்ளிரவில் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு... கோவையில் பரபரப்பு!

சம்பவ இடத்தில் போலீஸ் விசாரணை
சம்பவ இடத்தில் போலீஸ் விசாரணை

நள்ளிரவில் பெட்டிக்கடையின் மீது இளைஞர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சேரன் மாநகர் பகுதியில் உள்ள வினோபாஜி நகரில் பிரபல உணவகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே பெட்டிக்கடை உள்ளது. அந்த கடையில் இளைஞர்கள் சிலர் நேற்று இரவு சிகரெட் வாங்கியுள்ளனர். அப்போது, சிகரெட்டுக்கு கடைக்காரர் பணம் கேட்டுள்ளார். ஆனால், பணம் தரமறுத்து இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடைக்காரருக்கும், இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன் பின் அங்கிருந்து சென்ற இளைஞர்கள், சிறிது நேரத்தில் திரும்பி வந்தனர். எங்களிடமே சிகரெட்டுக்கு பணம் கேட்கிறாயா எனக்கூறி அந்தப் பெட்டிக்கடையின் மீது திடீரென பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இதனால், பெட்டிக்கடையின் ஒரு பகுதி சேதமடைந்தது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பீளமேடு போலீஸார், வினோபாஜி நகரை சேர்ந்த வரதராஜன்(25) சிகரெட் கேட்டு தகராறு செய்து கூட்டாளிகளுடன் வந்து பெட்ரோல் குண்டு வீசி உள்ளதாக தெரிவித்தனர். மேலும் இரண்டு இளைஞர்களைத் தேடி வருவதாகவும் கூறினர். கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்து.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in