தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவரானார் ஹசீனா சையத்... தேசிய தலைமை அறிவிப்பு!

ஹசீனா சையத்
ஹசீனா சையத்

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹசீனா சையத் நியமனத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார் என்று பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்

தமிழகத்தில் நேற்று மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஹசீனா சையத்
ஹசீனா சையத்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் மயிலாடுதுறை தொகுதியில் மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்த ஆர்.சுதா போட்டியிட்டார். சுதா தேர்தலில் போட்டியிட்டதையடுத்து தற்போது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர்களுக்கு இடையூறு... நடிகர் விஜய் மீது போலீஸில் புகார்!

என் மகனுக்கு தர்ற தண்டனை ஒரு பாடமாக இருக்க வேண்டும்... மாணவி கொலை வழக்கில் குற்றவாளியின் தந்தை கதறல்!

நடுவானில் வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்... ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி!

உஷார்... வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்... தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் எல்லையில் நுழைய முயன்ற ட்ரோன்; பிஎஸ்எஃப் அதிரடி நடவடிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in