11 மணி நிலவரம் 24.37 சதவீத வாக்குகள் பதிவு... 2019 தேர்தலை விட 1.71 சதவீதம் குறைவு!

மனைவியுடன் வந்து வாக்களித்த ஆளுநர் ஆர்.என்.ரவி
மனைவியுடன் வந்து வாக்களித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

மக்களவைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி படி தமிழ்நாட்டில் சராசரியாக  24.37% வாக்குகள் பதிவாகி உள்ளது. இதுவே 2019 தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 26.08 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாக்களித்த ரஜினி
வாக்களித்த ரஜினி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40  தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்கி நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் எந்த வித குழப்பங்களும் பிரச்சினைகளும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவது.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு திரை உலக பிரபலங்கள் பலரும் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வருகின்றனர். கடந்த காலங்களில் நடந்த  தேர்தல்களில் அவர்கள் இத்தனை அக்கறை காட்டியதில்லை. அதனாலேயே அவர்கள் கடும் விமர்சனத்திற்கும் உள்ளானார்கள். 

முதல்வர் ஸ்டாலின் வாக்களிப்பு
முதல்வர் ஸ்டாலின் வாக்களிப்பு

ஆனால் இந்த தேர்தலில், ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், த்ரிஷா என முக்கிய நடிகர், நடிகைகள் காலையிலேயே வந்து வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர். அதேபோல திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் காலையிலேயே தங்கள் வாக்குகளைச் செலுத்தி விட்டனர். இருந்த போதும்கூட வாக்குப் பதிவு சதவீதம் 2019 தேர்தலைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது காலை 11 மணி நிலவரப்படி படி தமிழ்நாட்டில் சராசரியாக  24.37% வாக்குகள் பதிவாகி உள்ளது. இதுவே 2019 தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 26.08 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத் தக்கது.

பிரபலங்கள் முக்கிய தலைவர்கள் என அனைவரும் வாக்களித்து வரும் நிலையில் தமிழக ஆளுநர்  ஆர்.என் ரவியும் தனது வாக்கை பதிவு செய்தார். சென்னை கிண்டி அருகே உள்ள அட்வெண்ட் கிறிஸ்தவ நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் ஆளுநர் ஆர்.என்.ரவியும் அவரது மனைவியும் வாக்களித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in