ஆம் ஆத்மி - காங்கிரஸ் தொகுதிப்பங்கீடு இறுதியானது... இந்தியா கூட்டணிக்கு அடுத்த குட்நியூஸ்!

கேஜ்ரிவால் ராகுல் காந்தி
கேஜ்ரிவால் ராகுல் காந்தி

டெல்லி, குஜராத், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் பஞ்சாபில் மட்டும் இந்த இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட முடிவு செய்துள்ளன.

இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான இழுபறி நீடித்துக்கொண்டே இருந்தது. குறிப்பாக மம்தா பானர்ஜி, அர்விந்த் கேஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் காங்கிரஸுக்கு குடைச்சல் கொடுத்து வந்தனர். இதில் நேற்று உ.பியில் சமாஜ்வாதி - காங்கிரஸ் தொகுதிப்பங்கீடு இறுதியானது. 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் 17 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், மீதமுள்ள 63 தொகுதிகளில் சமாஜ்வாதி மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளும் களம்காண உள்ளன. இதில் ரேபரேலி, அமேதி, வாரணாசி, கான்பூா் நகா், ஃபதேபூா் சிக்ரி, பஸ்கான், சஹாரன்பூா், பிரயாக்ராஜ், மகராஜ்கஞ்ச், அம்ரோஹா, ஜான்சி, புலந்த்சாகா், காஜியாபாத், மதுரா, சீதாபூா், பாரபங்கி, தேவரியா ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஹேமந்த் சோரன் ராகுல் கேஜ்ரிவால்
ஹேமந்த் சோரன் ராகுல் கேஜ்ரிவால்

இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து டெல்லியிலும் தொகுதிப்பங்கீடு இறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி, குஜராத், அசாம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹரியாணா, குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் 'இந்தியா' கூட்டணியில் உள்ள காங்கிரஸ்-ஆம் ஆத்மி இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன. அதேபோல குஜராத்தில் காங்கிரஸ் 24 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 2 தொகுதியிலும், ஹரியாணாவில் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 1 தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் ஆம் ஆத்மி
காங்கிரஸ் ஆம் ஆத்மி

அதேபோல அசாமிலும் ஆம் ஆத்மிக்கு ஒரு தொகுதியை ஒதுக்க காங்கிரஸ் முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பஞ்சாபில் மட்டும் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகள் பிரதான கட்சிகளாக இருப்பதால், இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. நேற்று சமாஜ்வாதியுடனான கூட்டணி இறுதியான நிலையில், இன்று ஆம் ஆத்மி கூட்டணியும் உறுதியாகியுள்ளது இந்தியா கூட்டணியினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கோடிகளில் நஷ்ட ஈடு?! சர்ச்சையைக் கிளப்பிய நடிகை த்ரிஷாவின் வக்கீல் நோட்டீஸ்!

விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் மனைவியிடம் ரூ. 43 கோடி சுருட்டல்!

கட்டையால் தாக்கி பெண் கொடூரக் கொலை... கல்லூரி மாணவி, தாய் கைது!

ரூ.300 கோடி லஞ்சம்... முன்னாள் ஆளுநர் வீட்டில் சிபிஐ ரெய்டு!

சூப்பர் ஸ்பீடு விஜய்... இன்னும் 10 நாளில் தொகுதிப் பொறுப்பாளர்களை அறிவிக்கிறார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in