பாஜக மீண்டும் வென்றால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சமாக உயரும்... திண்டுக்கல் சீனிவாசன் பகீர்!

திண்டுக்கல்லில் முபாரக்கை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் பிரச்சாரம்
திண்டுக்கல்லில் முபாரக்கை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் பிரச்சாரம்

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சம் ரூபாயாக உயரும் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு மட்டும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக்-ஐ ஆதரித்து அக்கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல்லில் அதிமுக பிரச்சாரம்
திண்டுக்கல்லில் அதிமுக பிரச்சாரம்

நத்தம் அருகே உள்ள சிறுகுடியில் முகமது முபாரக் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ”இந்தியாவில் 10 ஆண்டுகள் ஆண்ட பாஜக, நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றிம் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.” என்றார்.

அதிமுக பிரச்சாரத்தில் பங்கேற்ற மக்கள்
அதிமுக பிரச்சாரத்தில் பங்கேற்ற மக்கள்

மேலும், “கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இனிமேல் நடுத்தர வர்க்க மக்கள் தங்கத்தை வாங்க முடியாத நிலை உருவாகும். அதற்காக, வீட்டில் உள்ளவர்களுக்கு தங்கத்தின் பெயரில், ’தங்கராசு’, ’தங்கம்’, ’பவுன்தாய்’ என்று பெயர் தான் வைக்க முடியும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயாக உயர வாய்ப்புள்ளது. இவற்றை பாஜகவால் கட்டுப்படுத்த முடியாது” என்றார். ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று 54 ஆயிரத்து 960 க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், விரைவில் 55 ஆயிரம் ரூபாயை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

 சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in