சிறையில் உள்ள கேங்ஸ்டர் மனைவிக்கு தேர்தலில் போட்டியிட சீட்... மாயாவதி தாராளம்!

மாயாவதி, ஸ்ரீகலா, தனஞ்சய் சிங்
மாயாவதி, ஸ்ரீகலா, தனஞ்சய் சிங்

உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூர் மக்களவைத் தொகுதியில் கேங்ஸ்டர் தனஞ்சய்சிங் சிங்கின் மனைவி ஸ்ரீகலா சிங்குக்கு பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிட சீட் வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த நிலையில். மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) 11 வேட்பாளர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் அதர் ஜமால் லாரியை வேட்பாளராக அக்கட்சி களமிறக்கியுள்ளது.

அதர் ஜமால் லாரி
அதர் ஜமால் லாரி

இந்த தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலத் தலைவர் அஜய் ராயை வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. மேலும், இந்த தொகுதியில் அகில இந்திய இந்து மகா சபை சார்பாக நிர்மோகி அகாடா என்ற சாதுக்கள் அமைப்பைச் சேர்ந்தவர் திருநங்கை மகாமண்டலேஸ்வர் ஹேமாங்கி சகி போட்டியிடுகிறார்.

பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில் சிறையில் உள்ள கேங்ஸ்டர் மனைவி ஒருவருக்கும் இடம் கிடைத்துள்ளது உத்தரப்பிரதேச அரசியலில் சர்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஜான்பூர் மக்களவைத் தொகுதியில் பிஎஸ்பி சார்பாக ஸ்ரீகலா சிங் போட்டியிடுகிறார்.

தனஞ்சய் சிங்
தனஞ்சய் சிங்

இவரது கணவர் தனஞ்சய் சிங் உத்தரப்பிரதேச மாநில போலீஸாருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவர். இவர் மீது டெல்லி, ஜான்பூர் மற்றும் லக்னோவில் கொலை, மிரட்டி பணம் பறித்தல், கடத்தல், கலவரம் மற்றும் குற்றத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவர் ஒரு முறை எம்எல்ஏவாகவும், ஒருமுறை ஜான்பூர் தொகுதி எம்.பி-யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் கடத்தல் வழக்கில் அவருக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதனால் சிறையில் உள்ள தனஞ்சய் சிங்கின் மனைவி ஸ்ரீகலா சிங்கை வேட்பாளராக மாயாவதி அறிவித்துள்ளார்.

இதுதவிர மெயின்புரியில் சிவபிரசாத் யாதவ், பரேலியில் சோட்டாலால் கங்வார், பண்டாவில் மயங்க் திவேதி, காஜிபூரில் உமேஷ் குமார் சிங் உள்ளிட்ட 11 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

 சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in