விண்வெளியில் தடம் பதிக்கப்போகும் தமிழர்... யார் இந்த அஜித் கிருஷ்ணன்?

விண்வெளி்க்கு செல்லும் நான்கு பேர்
விண்வெளி்க்கு செல்லும் நான்கு பேர்

ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்குச் செல்ல தேர்வாகியுள்ள நால்வரில் ஒருவர் தமிழர் என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் சென்னையில் பிறந்த அஜித் கிருஷ்ணன் விரைவில் விண்வெளிக்கு சென்று புதிய சாதனையை படைக்க உள்ளார்.

வீரர்களுடன் மோடி
வீரர்களுடன் மோடி

இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் சார்பில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக, இந்திய விமான படையை சேர்ந்த 12 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் இறுதியாக 4 பேர் தேர்வு செய்யப்பட்டு ரஷ்யாவில் இறுதிக்கட்ட பயிற்சிகளுக்காக அனுப்பப்பட்டிருந்தனர். அவர்கள் யார் என்பது குறித்து ரகசியம் காக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்த 4 வீரர்களையும் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்படி குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன் மற்றும் சுபாஷ் சுக்லா ஆகிய 4 பேர் இந்தியாவின் முதல் விண்வெளி பயணத்திற்கான வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் விங் கமாண்டர்கள் அல்லது குரூப் கேப்டன்கள் பொறுப்பில் இருந்து வருபவர்கள் ஆவர். இவர்கள், பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவிற்கு விண்வெளிக்கு பயணித்து, அங்கு 3 நாட்கள் ஆய்வுகளை மேற்கொண்டு, பூமிக்கு திரும்புவதே இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.

அஜித் கிருஷ்ணன்
அஜித் கிருஷ்ணன்

விண்வெளிக்கு செல்லும் 4 பேரில் குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் தமிழகத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. இவர், 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார். தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) இருந்து தேர்ச்சி பெற்ற இவர், விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக, ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் மற்றும் மரியாதை வாள் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். அஜித் கிருஷ்ணன் 2003, ஜூன் 21 ஜூன் அன்று இந்திய விமானப்படையின் போர்-விமானப் பிரிவில் நியமிக்கப்பட்டார். இவர் பயிற்சி விமானிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும் உள்ளார்.

மிகவும் சவாலான பணியான, இந்திய விமானப்படையின் புதிய விமானங்களுக்கான டெஸ்ட் பைலட்டாகவும் உள்ளார். அவருக்கு 2,900 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளது. வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் பணியாளர்கள் சேவைக் கல்லூரியில் (DSSC) பயிற்சி பெற்றவர். இவ்வளவு சிறப்புகளை கொண்ட அவர், தற்போது விண்வெளியில் தடம் பதித்த தமிழன் என்ற பெயரையும் விரைவில் பதிக்க உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் பாலிவுட் இயக்குநர்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரத்த வெள்ளத்தில் போலீஸ்காரர்... ‘எதிர்நீச்சல்’ நடிகை மதுமிதா கைது?!

ஏடிஎம். உள்ளே கர்ப்பிணி மனைவியைக் கொன்ற சந்தேகக் கணவன்!

காவலுக்கு நின்ற போலீஸார்... நகையைப் பறித்து கொண்டு ஓடிய அவலம்; தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

சசிகலா இல்லம் கோயில்; கருணாநிதி நினைவிடம் தாஜ்மஹால்... அடிச்சுத் தாக்கும் ரஜினி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in