கருணாசாகர் கணக்கு என்ன... லாலு கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்!

காங்கிரஸ் கட்சியில் இணைந்த கருணாசாகர்
காங்கிரஸ் கட்சியில் இணைந்த கருணாசாகர்

பீகாரைச் சேர்ந்த கருணாசாகர் தமிழ்நாட்டில் டிஜிபி-யாக இருந்து ஓய்வுபெற்றவர். பணி ஓய்வுக்குப் பிறகு லாலு பிரசாத் யாதவ் கட்சியில் இணைந்து அரசியலில் நுழைந்தார். தற்போது லாலு கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.

தமிழ்நாடு மாநிலப் பிரிவின் 1991-ம் ஆண்டின் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் கருணாசாகர். பீகாரின் பாட்னாவிலுள்ள தனாருவா கிராமத்தை சேர்ந்த இவர், டெல்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையில் எம்.ஏ., பயின்றார். தமிழ்நாடு மாநிலப் பிரிவில் டிஜிபி பதவி வரை உயர்ந்து ஏப்ரல், 2023-ல் ஓய்வுபெற்றார். இதையடுத்து அடுத்த மாதமே அவர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியில் இணைந்தார். பிறகு, தமிழகத்தில் பீகார்வாசிகள் தாக்கப்படுவதாக எழுந்த புரளியில், இருமாநிலங்களுக்கு இடையே பேசி பிரச்சினையை முடிப்பதில் கருணாசாகர் முக்கியப் பங்காற்றினார்.

கருணாசாகர்
கருணாசாகர்

பீகாரில் உயர் சாதியினர்கள் பாஜக ஆதரவாளர்களாகக் கருதப்படுவது உண்டு. யாதவர் மற்றும் முஸ்லிம் வாக்குகளை மட்டுமே ஆர்ஜேடி நம்பியிருப்பதாகவும் கூறப்படுவது உண்டு. இச்சூழலில் தமிழகத்தில் ஓய்வுபெற்ற கருணா சாகர், பூமியார் சமூகத்தவர் என்பதால் அவர்கள் வாக்கு தமக்கு கிடைக்கும் என லாலு கருதினார். இதனால், அப்போது துணை முதல்வராக இருந்த தேஜஸ்வீ பிரசாத் யாதவ் பல முக்கிய தலைவர்களையும் அழைத்து கருணாவின் அரசியல் பிரவேசத்தை விழாவாக நடத்தினார்.

இதன் காரணமாக, மக்களவை தேர்தலில் ஆர்ஜேடியில் தற்போது கருணா வசிக்கும் ஜெஹனாபாத்தில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது.

லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ்

ஆனால், அவரை ஏனோ லாலு கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். இதன் காரணமாக, மனம்நொந்த கருணா, காங்கிரஸில் இணைந்து விட்டார். இவரது இணைப்பு நேற்று முன் தினம் டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பீகாரில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆர்ஜேடியும் காங்கிரஸும் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இச்சூழலில் காங்கிரஸால் கருணாவுக்கு தேசிய அளவில் முக்கிய பதவி மட்டுமே அளிக்கும் நிலை உள்ளது. ஏனெனில், பீகாரில் அனைத்துத் தொகுதிகளுக்கும் காங்கிரஸ் தனது வேட்பாளர்களை அறிவித்து விட்டது.

குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதியான ராமா கிஷோர் சிங்கும், ஆர்ஜேடியிலிருந்து விலகியுள்ளார். முன்னாள் எம்எல்ஏ-வுமான ராமா சிங், தனக்கு ஆர்ஜேடி சார்பில் வைஷாலி தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கேட்டிருந்தார். ஆனால், அங்கு ஆர்ஜேடி சார்பில் மற்றொரு குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதியான முன்னா சுக்லாவிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு விட்டது.

இதனால், பாஜகவின் கூட்டணிக் கட்சியான லோக் ஜன சக்தியில் ராமா சிங் நேற்று இணைந்துவிட்டார். சிராக் பாஸ்வான் தலைமையிலான இக்கட்சியில் ராமா சிங் 2014 மக்களவை தேர்தலில் வைஷாலியில் வென்று எம்பி-யானவர். பிறகு ஆர்ஜேடியில் இணைந்தார். ராமா சிங்கின் மனைவியான வீனா சிங், மெஹனர் தொகுதி ஆர்ஜேடி எம்எல்ஏவாக உள்ளது குறிப்பிடத் தக்கது.

காங்கிரஸ் கட்சியில் கருணாசாகர் இணைந்தபோது...
காங்கிரஸ் கட்சியில் கருணாசாகர் இணைந்தபோது...

பீகாரில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆர்ஜேடி 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 9, சிபிஐ எம்எல் 5, முகேஷின் விஐபி கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சிபிஐ மற்றும் ஐபிஎம் தலா ஒரு தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

ஆளுநர் மீது இளம்பெண் பாலியல் புகார்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வைத் தவற விட்டவர்களுக்கு குட்நியூஸ்... 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு விரைவில் துணைத்தேர்வு!

நடுரோட்டில் ஓட ஓட விரட்டி மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவன்... பெங்களூருவில் பரபரப்பு!

ஒரே நாளில் 3 பேர் வெயிலில் சுருண்டு விழுந்து உயிரிழப்பு!

வளைகாப்புக்குச் சென்ற போது விபரீதம்... ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in