வெறுப்பு பிரச்சாரம்; பாஜகவின் சமூக வலைதள பதிவு மீது வழக்கு... தேர்தல் ஆணையம் அதிரடி!

பாஜக
பாஜக

பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியான “காங்கிரஸ் அறிக்கை அல்லது முஸ்லீம் லீக் அறிக்கை” என்ற பதிவுக்கு எதிராக மல்லேஸ்வரம் சட்டமன்றத் தொகுதியின் பறக்கும் படையினர் எப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பல்வேறு குழுக்கள் மற்றும் வகுப்பினரிடையே வெறுப்பு மற்றும் பகைமையை தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பதிவின் மீது ஏப்ரல் 24 அன்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது என்று கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

“காங்கிரஸ் அறிக்கை அல்லது முஸ்லீம் லீக் அறிக்கை” என்ற தலைப்பில் ஏப்ரல் 23 அன்று எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதவிக்கு எதிராக மல்லேஸ்வரம் சட்டமன்றத் தொகுதியின் பறக்கும் படைக் குழு எப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாஜக
பாஜக

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “இந்திய தண்டனைச் சட்டத்தின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 125 மற்றும் 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டுதலைத் தூண்டுவது) ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் ஏப்ரல் 24 அன்று வெவ்வேறு குழுக்கள் மற்றும் குடிமக்களின் வகுப்புகளுக்கு இடையே வெறுப்பு மற்றும் பகைமையை ஊக்குவித்ததற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in