கர்நாடகா எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ சர்ச்சை... மகனுக்கு எதிரான சதி என தந்தை ரேவண்ணா புலம்பல்

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கியிருப்பது தொடர்பாக அவரது தந்தை ரேவண்ணா விளக்கமளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடா மகனும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர்களில் ஒருவருமாக இருப்பவர் ஹெச்.டி.ரேவண்ணா. இவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்பியாக உள்ளார்; மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் பொதுச்செயலர்களில் ஒருவராகவும் உள்ளார். அண்மையில் இந்த பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ் தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்திருக்கிறது.

மகன் பிரஜ்வல் ரேவண்ணா - தந்தை ரேவண்ணா
மகன் பிரஜ்வல் ரேவண்ணா - தந்தை ரேவண்ணா

மக்களவைத் தேர்தலின் மத்தியில் இது மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் பிரதான கூட்டாளியான பாஜகவை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் குறித்து ஏற்கனவே பாஜக அறிந்திருப்பதையும், அதன் பின்னரும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்காக பிரதமர் மோடி உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்ததையும் காங்கிரஸ் கட்சி தீவிரமாக கேள்வி எழுப்பி உள்ளது. இந்த விவகார்த்தில் மோடி மவுனம் சாதிப்பதாக அவரையும் காங்கிரஸ் கட்சி இழுத்துள்ளது.

இந்த நிலையில் மகன் பிரஜ்வல் ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணா வாய் திறந்திருக்கிறார். இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய பேசிய அவர், மகனுக்கு எதிராக சதி நடப்பதாக அச்சம் தெரிவித்தார். அதே வேளையில் தான் எதற்கும் பயப்படப்போவதில்லை என்றும் தெரிவித்தார். ”பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக என்ன மாதிரியான சதி நடக்கிறது என்பது எனக்குத் தெரியும். நான் பயந்து ஓடுகிறவன் அல்ல. நான்கைந்து வருடங்களுக்கு முந்தைய வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்கள்” என்று ஹெச்.டி.ரேவண்ணா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி - ஹெச்.டி.தேவ கவுடா - பிரஜ்வல் ரேவண்ணா
பிரதமர் மோடி - ஹெச்.டி.தேவ கவுடா - பிரஜ்வல் ரேவண்ணா

ஆபாச வீடியோக்களில் பெரும்பாலானதை பிரஜ்வல் தனது மொபைல் போனில் பதிவு செய்ததாகவும், அவை அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் வைத்து எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கர்நாடக காவல்துறையின் கூற்றுப்படி, ஹாசனில் கிடைத்த பென் டிரைவில் 2,976 வீடியோக்கள் இருந்தன. அவை சில நொடிகளில் தொடங்கி சில நிமிடங்கள் வரை நீளக்கூடியவை. இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான புகார்களை விசாரிக்க மாநிலத்தின் காங்கிரஸ் அரசு ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா மீதான புகார்கள் வலுத்தபோது அவர் ஜெர்மனிக்கு பறந்தோடியது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in