இரட்டை இலை எங்களுக்கே... மீண்டும் முஷ்டியை முறுக்கும் ஓபிஎஸ்!

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கு கிடைக்கும் எனவும், நாங்கள் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவோம் எனவும் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மதுரையில் மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.

ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ”எடப்பாடி பழனிசாமி தரப்பு மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வி அடையும். தேர்தலுக்குப் பிறகு அவர்கள் எப்படி பேசுவார்கள் என்று பாருங்கள். அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது என்றுதான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக தொட்டர்கள் பயன்படுத்தக்கூடாது என தீர்ப்பில் சொல்லப்படவில்லை. அதிமுகவினரின் ரத்தத்தில் இரட்டை இலை உள்ளது. இதை மாற்ற நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?” என்றார்.

இரட்டை இலை சின்னம்
இரட்டை இலை சின்னம்

தொடர்ந்து பேசிய அவர், “ஏற்கெனவே பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று போட்டியிட்டு உள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தி இருக்கிறார். எனவே அவர் மீண்டும் பிரதமராக வேண்டும் என விரும்புகிறோம். உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவைப் பாராட்டுகிறார்கள். எனவே மீண்டும் பாஜக தலைமையில் நாங்கள் தேர்தலில் போட்டியிடுவோம்.” என்றார்.

மோடியுடன் ஓபிஎஸ்
மோடியுடன் ஓபிஎஸ்

உங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக தற்காலிகமாக இரட்டை இலை சின்னம், அவர்கள் தரப்பிற்கு வழங்கப்பட்டது. இறுதித் தீர்ப்பு வரும்போது, தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று நிரூபித்து இரட்டை இலை சின்னத்தைப் பெறுவோம்” என்றார் ஓபிஎஸ்.

இதையும் வாசிக்கலாமே...

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!

'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?

கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!

நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!

நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in