
திமுக கூட்டணியில் இருப்பதால் தான் நாங்கள் வெற்றியடைகிறோம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
அதிமுக- பாஜகவிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணி உடைந்தது. அக்கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளது. இதையடுத்து புரட்சி பாரதம், ஜனசேனா உள்ளிட்ட கட்சிகள் அந்த கூட்டணியில் இருந்து விலகியுள்ளன. இதற்கிடையில் இந்தியா கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேரும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரோட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், " பாஜக- அதிமுக இடையிலான கூடடணியைக் காட்டி அசிங்கமாக பேரம் பேசமாட்டோம்.
பாஜகவுக்கும், அதிமுகவுக்கும இடையே இருப்பது அடிமை கூட்ணி. காங்கிரஸ்- திமுக இடையே இருப்பது கொள்கைக்கூட்டணி. மேலும், திமுக கூட்டணியில் இருப்பதால் தான் நாங்கள் வெற்றியடைகிறோம். தனியாக நின்றால் கேள்விக்குறி தான்" என்றார். இவரின் பேட்டி காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!
கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!
பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!
அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!