கழுத்து வரை ஊழல் நிறைந்துள்ளது... காங்கிரஸை வெளுத்து வாங்கிய அமித்ஷா

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒவ்வொரு அங்கமும் இந்தியாவிற்கு சொந்தமானது என்பது தான், பாஜகவின் நிலைப்பாடு என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளுக்கு மே 13ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் அங்கு வருகிற மே மாதம் 13ம் தேதி துவங்க உள்ளது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது உட்பட பல்வேறு விவகாரங்கள் அந்த மாநிலத்தில் பிரதானமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ஜார்கண்ட் மாநிலத்தின் குந்தி பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதால் பாகிஸ்தானை பற்றி பேச வேண்டாம் என இந்தியா கூட்டணி தலைவர் பருக் அப்துல்லா கூறியுள்ளார். தற்போது மணிசங்கர் ஐயர் அதே கருத்தை பேசி உள்ளார். நான் சொல்கிறேன். பாகிஸ்தான் இந்தியாவுக்கு சொந்தமானது. அதை எந்த சக்தியாலும் பறிக்க முடியாது. இதை நான் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக்கு சொல்ல விரும்புகிறேன்” என்றார்.

ஜார்க்கண்டில் அமித்ஷா பிரச்சாரம்
ஜார்க்கண்டில் அமித்ஷா பிரச்சாரம்

மேலும், ”காங்கிரஸுக்கு என்ன ஆனது என்று எனக்கு தெரியவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்று நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் இப்போது அணுகுண்டு பற்றி பேசி பாகிஸ்தான் மீது கேள்விக்குறியை வைக்கிறார்கள். பாஜகவின் நிலைப்பாடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவிற்கு சொந்தமானது என்பதுதான். அது இந்தியாவுடன் இருக்கும் என்பது தெளிவாக உள்ளது. பாஜகவுக்கு வாக்களிக்குமாறு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஜார்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி கழுத்து வரை ஊழல் நிறைந்துள்ளது. ஜேஎம்எம் மற்றும் காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியல் செய்கின்றன. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் 70 ஆண்டுகளாக காங்கிரஸ் தடைகளை ஏற்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி ஐந்து ஆண்டுகளில் கோயிலை கட்டினார். ராகுல் தனது வாக்கு வங்கிக்கு பயந்து ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வரவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் எந்த பழங்குடியினரையும் குடியரசுத் தலைவர் ஆக்கியதில்லை. ஏன் என்று ராகுல் காந்தியிடம் கேள்வி கேட்க விரும்புகிறேன்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!

'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!

இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in