பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்கே சொந்தம்... அடித்துச் சொன்ன அமித் ஷா!

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா

காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்கு சொந்தமானது, அதை எந்த சக்தியாலும் பறிக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

ஜார்கண்டின் குந்தியில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து காங்கிரஸ் கேள்விக்குறியை எழுப்புகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்கு சொந்தமானது. அணுகுண்டு வைத்திருப்பதால் பாகிஸ்தானை மதிக்க வேண்டும் என்று மணிசங்கர் அய்யர் கூறுகிறார். சில நாட்களுக்கு முன்பு இந்தியா கூட்டணி தலைவர் பரூக் அப்துல்லா, பாகிஸ்தானில் அணுகுண்டு உள்ளது என்பதால் பேச வேண்டாம் என்று கூறினார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது, அதை எந்த சக்தியாலும் பறிக்க முடியாது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா
உள்துறை அமைச்சர் அமித்ஷா

காங்கிரஸுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்று நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் காங்கிரஸ் இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது கேள்விக்குறியை வைக்கிறீர்கள்.

பாஜக கொடிகள்
பாஜக கொடிகள்

ஜார்க்கண்டில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி ஊழலில் கழுத்து வரை மூழ்கி உள்ளது. ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி ரூ.300 கோடி நில ஊழல், ரூ. 1,000 கோடி சுரங்க ஊழல், ரூ. 1,000 கோடி எம்என்ஆர்இஜிஏ ஊழல், ரூ. 40 கோடி மதுபான ஊழல். ஏழை மக்களின் பணத்தை ஜீரணிக்க ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்," என்று அவர் கூறினார்

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!

'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!

இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in