நான் ஒரிஜினல் விவசாயி... டிராக்டர் ஓட்டி கட்சியினரை உற்சாகப்படுத்திய இபிஎஸ்!

டிராக்டர் ஓட்டிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
டிராக்டர் ஓட்டிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

தர்மபுரி மாவட்டம் அரூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 'கொங்கு ஆலயம்’ திறப்பு விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு டிராக்டர் ஓட்டி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் கொங்கு வேளாளர் கவுண்டர் சங்கத்தின் சார்பில் பல்துறை பயிற்சி அளிக்கும் ’கொங்கு ஆலயம்’ திறப்பு விழா நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்களில், உழவு கருவிகளுடன் நடைபெற்ற உழவர்கள் பேரணியை அவர் தொடக்கி வைத்தார். அப்போது கழுத்தில் பச்சை துண்டு அணிந்து கொண்டு, டிராக்டரில் பின்புறம் கரும்புகள் இருக்க டிராக்டரை அவர் ஒட்டி வந்தார்.

டிராக்டர் ஓட்டிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
டிராக்டர் ஓட்டிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு வெள்ளி வேல் பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் கொங்கு பல்நோக்கு பயிற்சி ஆலயத்தை அவர் திறந்து வைத்தார். இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.சி.கருப்பண்ணன், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சாதாரண குடியில் பிறந்த மாணவர்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்தக்கூடிய நிகழ்ச்சி இது. நான் முதலமைச்சராக இருந்தவன். ஒரு கட்சிக்கு பொதுச் செயலாளராக இருப்பவன். ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவன். இந்த பயிற்சி பள்ளியில் 20% மற்ற சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அதை அவர் ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவதாக உறுதி அளித்துள்ளார்.” என்றார்.

எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளி வேல் வழங்கப்பட்டது
எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளி வேல் வழங்கப்பட்டது

மேலும், “ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நான் முதலமைச்சர் ஆன போது என்னை எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏளனப்படுத்தி பேசினார்கள். ஆட்சி நீடிக்காது என்றார்கள். ஆனால் உங்களுடைய ஆதரவோடு நான்கு வருடம் இரண்டு மாதம் ஆட்சியை நடத்தினோம். சிறப்பான ஆட்சி என்று சொல்கிற அளவுக்கு சிறப்பான ஆட்சி தந்தோம். மேலும் 11 மருத்துவக் கல்லூரி, 6 சட்டக்கல்லூரி தந்தோம். 7.5% இட ஒதுக்கீடு தந்தோம். இது மிகப்பெரிய சாதனை. இன்றைய ஆட்சியாளர்கள் முதல் கையெழுத்து நீட் ரத்து என்றார்கள். அது இன்றும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் பல லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்குவதாக கூறி அதையும் முறையாக செய்யவில்லை. அண்மையில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில் அந்த கையெழுத்து வாங்கிய அட்டைகள் குப்பை தொட்டியில் வீசப்பட்டது.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் தேசிய அளவில் உள்ளாட்சித் துறையில் 140 விருதுகள் பெற்றோம். அதிமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் தந்தோம். விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கினோம். பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை கீழ் வரும் 40 ஆயிரம் ஏரிகளில் குடிமராமத்து திட்டம் மூலம் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, தூர்வாரப்பட்டு அதில் கிடைக்கும் வண்டல்மண்ணை விவசாயிகள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள வகை செய்தோம். இன்று ஒரு லோடு மண் அள்ள முடியுமா? நம் உயிர் உள்ளவரை நம்முடன் ஒட்டி இருக்கும் ஒரே செல்வம், கல்விச் செல்வம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும். அது போன்ற பெண்கள் இந்த வள்ளி கும்மி ஆட்டத்தை பழகிக்கொள்ள வேண்டும்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!

'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?

கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!

நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!

நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in