ரூ.6.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்... மூட்டை, மூட்டையாக கொண்டு சென்றதால் அதிகாரிகள் அதிர்ச்சி!

நாமக்கல்லில் ரூ.6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
நாமக்கல்லில் ரூ.6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட 29 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூபாய் 6.2 கோடியாகும்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும், பரிசுப்பொருட்கள் விநியோகத்தை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு மேற்கொள்ளப்படும் தணிக்கைகளின் போது உரிய ஆவணங்கள் என்று எடுத்து வரப்படும் பணம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

நாமக்கல்லில் ரூ.6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
நாமக்கல்லில் ரூ.6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மல்லூர் பகுதியில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே மினி வேன் ஒன்றில் மூட்டைகள் அடக்கப்பட்டு வந்து கொண்டிருப்பதை அறிந்த அதிகாரிகள் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் ஒருவர் அந்த வாகனத்துடன் உடன் வந்திருந்தார். இதையடுத்து வாகனத்தில் இருந்த பொருட்களை சோதனையிட்டபோது, உள்ளே நகைகள் பெட்டி பெட்டியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

நாமக்கல்லில் ரூ.6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
நாமக்கல்லில் ரூ.6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

இதையடுத்து நகைகளை எடுத்து வந்தவர்கள் தங்களிடம் இருந்து ஆவணங்களை அதிகாரிகளிடம் வழங்கி உள்ளனர். சேலத்தைச் சேர்ந்த நகை நிறுவனம் ஒன்றின் கிளைகளுக்கு அந்த நகைகளை எடுத்து செல்வதாக அவர்கள் கூறினர். இருப்பினும் அதிக அளவில் தங்க நகைகள் இருந்ததால், அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். அங்கு அவரது முன்னிலையில் நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

நாமக்கல்லில் ரூ.6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
நாமக்கல்லில் ரூ.6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

பறிமுதல் செய்யப்பட்டுள்ள தங்க நகைகளின் மொத்த எடை 29 கிலோ என தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.6.2 கோடி ஆகும். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிக எடையிலான நகைகள் எடுத்துச் செல்லப்பட்டதால், அவை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், ஆவணங்களை சரிபார்த்த பின்னர் அவை விடுவிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தேர்தல் அதிகாரிகளின் சோதனையின் போது, மூட்டை மூட்டையாக தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தஞ்சையில் வீதி, வீதியாக நடந்து சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பு... ஆர்வமுடன் செல்ஃபி எடுத்த பொதுமக்கள்!

ராமேஸ்வரத்தில் மீனவர்களின் காலவரையற்ற போராட்டம் தொடங்கியது!

சரோஜாதேவி கால்ஷீட்டுக்கு காத்திருந்த எம்.ஜி.ஆர்!

10வது வேட்பாளரையும் அறிவித்தது பாமக... காஞ்சிபுரத்தில் களமிறங்குகிறார் ஜோதி வெங்கடேசன்!

அதிமுக வேட்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட திடீர் உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in