10வது வேட்பாளரையும் அறிவித்தது பாமக... காஞ்சிபுரத்தில் களமிறங்குகிறார் ஜோதி வெங்கடேசன்!

ஜோதி வெங்கடேசன்
ஜோதி வெங்கடேசன்
Updated on
1 min read

மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாமக
பாமக

ஏப்ரல் 19-ம் தேதி அன்று தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான மனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  27-ம் தேதி மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து அறிவித்து வருகின்றன. 

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளான பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி,  தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்,  ஓபிஎஸ் அணி உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி

அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 இடங்களும்,  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மூன்று இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமிழ் மாநில காங்கிரஸ் தூத்துக்குடி தவிர்த்த ஏனைய இரண்டு இடங்களுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதேபோல பாட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம் தவிர்த்த மற்ற ஒன்பது இடங்களுக்கும் வேட்பாளர்களை நேற்று அறிவித்தது.

காஞ்சிபுரத்திற்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அந்தத் தொகுதிக்கும் தனது வேட்பாளரை அக்கட்சி அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் தொகுதியில் பாமக சார்பில் ஜோதி வெங்கடேசன் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

முன்னதாக தருமபுரி தொகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த அரசாங்கம் என்ற வேட்பாளர் மாற்றப்பட்டு சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதற்கு அக்கட்சியினர் வெடி வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in