
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 20ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி தேவ்நாராயண் கோயிலுக்குச் சென்றபோது நன்கொடை வழங்கியதாகவும், அதில் வெறும் 21 ரூபாய் மட்டுமே இருந்ததாக தொலைக்காட்சிகளில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.
ஆனால், பிரதமரின் தனிப்பட்ட மத பக்தியை பிரியங்கா காந்தி இழிவுபடுத்திவிட்டதாகவும் இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்றும் பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், பிரியங்கா காந்திக்கு தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கு வரும் திங்கள்கிழமை மாலைக்குள் பதிலளிக்குமாறும், காலக்கெடு முடிவதற்குள் பதிலளிக்கவில்லை என்றால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இதேபோன்று கடந்த 18ம் தேதி சத்தீஸ்கரில் பாஜக பொதுக்கூட்டத்தில் அசாம் முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வா சர்மா தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் விதமாக கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு வரும் திங்கட்கிழமை மாலைக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்... சோகத்தில் நாட்டு மக்கள்!
அதிர்ச்சி... சேலம் ஆர் ஆர் பிரியாணி கடைக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்!
மகன் சாவில் மர்மம்... கண்டுகொள்ளாத போலீஸ்; வேதனையில் தாய், மகள் தற்கொலை
நாளை சந்திர கிரகணம்... குரு சந்திர யோகமும்... ராசிகளின் கூட்டணியும்!
இஸ்ரேல் குண்டுவீச்சில் குடும்பமே பலி... அடுத்த நாளே போர்க்களத்தில் களமிறங்கிய செய்தியாளர்!