வாக்குச் சாவடிக்குள் செல்போன்களுக்கு அனுமதியில்லை... பல இடங்களில் வாக்காளர்கள் திரும்பிச் செல்லும் அவலம்!

வாக்குப்பதிவு மையம்
வாக்குப்பதிவு மையம்

வாக்குச் சாவடிக்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

வாக்களிக்க காத்திருக்கும் மக்கள்
வாக்களிக்க காத்திருக்கும் மக்கள்

நாட்டின் மக்களவைத் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் அனைவரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். 

வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வருவதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கட்சி, சின்னம் ஆகிய அடையாளங்களுடன் வாக்குச்சாவடிக்கு வரக்கூடாது. வாக்குச்சாவடிக்குள் வாக்கு சேகரிக்கக் கூடாது, குறிப்பிட்ட சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

இந்த நிலையில் தற்போது கூடுதலாக வாக்குச் சாவடிக்குள் செல்போன்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்ற கூடுதல் கட்டுப்பாட்டையும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் செல்போன்களுடன் வாக்கு சாவடிக்குள் செல்ல வாக்காளர்கள் அனுமதிக்கப்படவில்லை, அப்படியானால் செல்போன்களை எங்கே வைத்து விட்டுச் செல்வது?  என்று சில வாக்குச்சாவடிகளில்  வாக்காளர்கள் பிரச்சனை எழுப்பினர்.

'வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. எனவே வாக்காளர்கள் செல்போன்களை வீட்டிலேயே வைத்துவிட்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்' என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது. 

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in