செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்; உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல்

செந்தில்பாலாஜி
செந்தில்பாலாஜி

ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுக்கள் அமலாக்க துறையின் கடும் எதிர்ப்பு காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தது.

செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை
செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை

இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு மீது பதில் மனு தாக்கல் செய்யும்படி அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இதையடுத்து இன்று அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...


ஓரம்போ... ஓரம்போ... மத்திய அமைச்சர் வண்டி வருது... டூவீலரில் வாக்குசேகரிக்கும் ஸ்மிருதி இரானி!

தேர்தல் நேரத்தில் திடீர் அதிர்ச்சி... பாஜக எம்.பி காலமானார்!

தேவகவுடாவுக்கு முற்றும் சிக்கல்; பேரனைத் தொடர்ந்து மகன் மீதும் பாலியல் வழக்குப்பதிவு!

அடுத்த அதிர்ச்சி... ஈரோடு ஸ்டிராங் ரூமில் கேமிரா பழுது; வாக்கு எண்ணிக்கை என்னாகும்?!

பயங்கரம்... கழுத்தை அறுத்து சித்த மருத்துவர், அவரது மனைவி கொடூரக் கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in