தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளா?... அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கறார் அறிவுறுத்தல்

தேர்தல் பிரச்சாரத்தில் சிறார்
தேர்தல் பிரச்சாரத்தில் சிறார்

தேர்தல் பிரச்சாரங்களில் எந்த வகையிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.

2024 பொதுத்தேர்தலுக்கான அதிகாரபூர்வமற்ற ஏற்பாடுகளில் நாடு தயாராகி வருகிறது. கூட்டணி பங்கீடுகள் முதல் தொகுதி பங்கீடுகள் வரை அரசியல் கட்சிகள் பரபரத்துக் கிடக்கின்றன. இவற்றின் மத்தியில் தேர்தலை சுமூகமாகவும், சகல தரப்பிலும் சங்கடமின்றியும் நடத்தி முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் உறுதி பூண்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் தொடக்கத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதன் மத்தியில், அரசியல் கட்சிகளுக்கு நிகராக தேர்தல் ஆணையமும் தயாராகி வருகிறது. இவற்றையொட்டி அரசியல் கட்சிகள் மற்றும் வாக்காளர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களையும் வழங்கத் தொடங்கியுள்ளது.

தேர்தல் ஆணையம் - பிரச்சாரத்தில் சிறார்
தேர்தல் ஆணையம் - பிரச்சாரத்தில் சிறார்

அவற்றில் ஒன்றாக இன்றைய தினம் வெளியிட்ட அறிவுறுத்தல் குழந்தைகள் நலன் சார்ந்து அமைந்துள்ளது. இதன்படி, பேரணிகள், முழக்கங்கள் எழுப்புதல், பிரசுரங்கள் விநியோகம், தேர்தல் தொடர்பான பிற செயல்பாடுகள் என எந்தவகையிலும் தேர்தல் பிரச்சாரங்களிலும் சிறார் மற்றும் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் கறார் அறிவிப்பை வெளிட்டுள்ளது. மேலும் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மதிப்பை குலைக்கும் வகையிலான உரையாடல்கள் அரசியல் பிரச்சார களங்களில் இடம்பெறவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

அது மட்டுமன்றி அரசியல் தலைவர்கள் அல்லது வேட்பாளர்கள், குழந்தையை தங்கள் கைகளில் வைத்திருப்பது, வாகனத்தில் அல்லது பேரணியில் குழந்தைகளை அழைத்துச் செல்வது உள்ளிட்ட பிரச்சார நடவடிக்கைகளுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அரசியல் கட்சி, அதன் வேட்பாளர், அரசியல் கட்சியின் கொள்கைகள் மற்றும் சாதனைகள் தொடர்பாக, அரசியல் பிரச்சாரத்தின் சாயலை உருவாக்கும் கவிதை, பாடல்கள், பேச்சு உள்ளிட்ட மறைமுக நடவடிக்கைகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்த தடை விதிக்கப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் சிறார்
தேர்தல் பிரச்சாரத்தில் சிறார்

இந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகளும் உண்டு. ஒரு அரசியல் தலைவர் அல்லது வேட்பாளரின் அருகில், தனது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் குழந்தை இருப்பது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை மீறுவதாக அமையாது. இவை உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் பல்வேறு வழிகாட்டுதல்கள், அனைத்து மட்டத்திலான தேர்தல் அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் களத்தில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவது தொடர்பாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!

'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?

கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!

நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!

நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in