25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்கம்... மேற்கு வங்கத்தில் தேர்தல் பணிகள் எப்படி நடக்கும்?

தேர்தல் பணியில் ஆசிரியர்கள் (கோப்பு படம்)
தேர்தல் பணியில் ஆசிரியர்கள் (கோப்பு படம்)

மேற்கு வங்கத்தில் உயர் நீதிமன்றத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களும் முன் கூட்டியே திட்டமிட்டபடி தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே, அவர்கள் மாற்றப்படுவார்களா, இதனால் அங்கு தேர்தல் பாதிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு மாநில அரசால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 25,753 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமனங்கள் முறைகேடாக நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

கொல்கத்தா உயர்நீதிமன்றம்
கொல்கத்தா உயர்நீதிமன்றம்

இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் 2016-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களையும் கடந்த 22-ம் தேதி பணி நீக்கம் செய்து, கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேற்கு வங்க மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

எனினும், இது எப்போது விசாரணைக்கு வரும், அதில் என்ன தீர்ப்பு கிடைக்கும் என்பது தெரியாத நிலையில் தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக, பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் முன்கூட்டிய திட்டமிடல் படி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

தேர்தல் பணியாளர்கள் (கோப்பு படம்)
தேர்தல் பணியாளர்கள் (கோப்பு படம்)

இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு பதில் மாற்று ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டிய சவால் அம்மாநில தேர்தல் ஆணையத்துக்கு எழுந்துள்ளது. தற்போது, பணி நீக்க ஆசிரியர்களில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் பட்டியலை தயார் செய்ய தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங், ராய்கஞ்ச் மற்றும் பலூர்காட் ஆகிய மூன்று முக்கிய தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தலில் நாளை (ஏப்ரல் 26) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக பல வாக்குச் சாவடிகளுக்கு பணியாளர்கள் செல்ல தொடங்கி விட்டனர். இந்தநிலையில், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை எப்படி தேர்தல் பணியில் ஈடுபடுத்தலாம் என மேற்கு வங்க எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையம்
மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையம்

இது தொடர்பாக அம்மாநில அரசு அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளோம். எனினும் கடைசி நேரத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை தேர்தல் பணியில் மாற்றுவது என்பது மிகவும் சவாலானது" என தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in