முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக ஆட்சேபகர பதிவு... உடனடியாக அகற்றுமாறு எக்ஸ் தளத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

எக்ஸ் தளம்
எக்ஸ் தளம்

தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையிலும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் கர்நாடக மாநில பாஜக சார்பில் பதிவிடப்பட்டதை முழுமையாக நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து வரும் மக்களவைத் தேர்தலுக்கு மத்தியில் முஸ்லிம்களை குறிவைத்து கர்நாடக பாஜக வெளியிட்ட அனிமேஷன் வீடியோவை அகற்றுமாறு இந்திய தேர்தல் ஆணையம் எக்ஸ் தளத்தை இன்று கோரி உள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையம்
இந்தியத் தேர்தல் ஆணையம்

முஸ்லீம்களுக்கும் இடஒதுக்கீடு என்பதை முன்வைத்து காங்கிரஸைத் தாக்கும் நோக்கத்தில் கர்நாடக பாஜக பதிவிட்ட அனிமேஷன் வீடியோ சர்ச்சைக்குள்ளானதை அடுத்து, அந்த இடுகையை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பிட்ட அந்த வீடியோவில் பட்டியலினத்தோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டைக் குறிக்கும் முட்டைகள் அடங்கிய கூடையில், ராகுல் காந்தியின் அனிமேஷன் கதாபாத்திரம் முஸ்லிம்களுக்கான முட்டையை இடுவது போல் காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ மே.4 அன்று வெளியிடப்பட்டதை அடுத்து, கர்நாடக காங்கிரஸ் சார்பில் பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா, ஐடி செல் தலைவர் அமித் மாளவியா மற்றும் கர்நாடக மாநில தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோர் மீது புகார் அளித்தது .

கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் ரமேஷ் பாபு அளித்த இந்த புகாரில், மேற்படி அனிமேஷன் வீடியோ தேர்தல் நடத்தை விதிகளை மீறியது மட்டுமின்றி, எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-ன் கீழும் குற்றமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர் இட ஒதுக்கீடு கோரிக்கை
இஸ்லாமியர் இட ஒதுக்கீடு கோரிக்கை

ஞாயிறு அன்று, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறியதற்காக அந்த அனிமேஷன் வீடியோவை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு கர்நாடக காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதனையடுத்து, தேர்தல் ஆணையம் தனது பங்குக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவில், “இந்த விவகாரத்தில் ஏற்கனவே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 79(3)(பி) மற்றும் விதி 3-ன் படி, ஆட்சேபனைக்குரிய பதிவை அகற்றுமாறு பெங்களூரு சைபர் கிரைம் பிரிவு மூலம் கர்நாடகா தலைமைத் தேர்தல் அதிகாரி ஏற்கனவே மே.5 அன்றி எக்ஸ் தளத்துக்கு உத்தரவிட்டுள்ளார் என்பது உங்கள் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!

இளையராஜா இசை தயாரிப்பாளருக்குத்தான் முழு சொந்தம்... தமிழ்பட இசையமைப்பாளர் பேட்டி!

பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்திச் சென்று பீர் பாட்டில்களால் தாக்குதல்... வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

அதிர்ச்சி... வெயிலில் சுருண்டு விழுந்து தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in