திமுக எம்எல்ஏ-வுக்கு திடீர் உடல்நலக்குறைவு... மருத்துவமனையில் அனுமதி; தொண்டர்கள் அதிர்ச்சி!

திமுக சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ., பொன்னுசாமி மருத்துவமனையில் அனுமதி
திமுக சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ., பொன்னுசாமி மருத்துவமனையில் அனுமதிBG

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பொன்னுசாமி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடைபெற உள்ள தேர்தலில் நாமக்கல் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு வேட்பாளராக மாதேஸ்வரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினர் பொன்னுசாமி கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த சனிக்கிழமை மாலை மாவட்ட செயலாளரும், ராஜ்யசபா எம்.பியுமான ராஜேஷ்குமாருடன் கொல்லிமலை பகுதியில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு புளியங்காட்டில் உள்ள தனது வீட்டில் எம்.எல்.ஏ பொன்னுசாமி தங்கியிருந்தார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசும் எம்.எல்.ஏ., பொன்னுசாமி
நிகழ்ச்சி ஒன்றில் பேசும் எம்.எல்.ஏ., பொன்னுசாமி

நேற்று அவருக்கு உடல்நிலை சரியில்லாததால், பிரச்சாரத்தில் கலந்துகொள்ளாமல் அவர் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை பொன்னுசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக முதலுதவி சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., திடீரென உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைக்கு எம்.எல்.ஏ பொன்னுசாமியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!

பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!

அதிர்ச்சி... அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்தது சீனா!

கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை; கொண்டாட்டம் தான்... மனம் திறந்த தமன்னா!

நடத்தையில் சந்தேகம்... மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த வாலிபர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in