உங்கள் தொகுதிக்கு என்ன தேவை?...தூத்துக்குடி மக்களிடம் கருத்துக் கேட்ட திமுக குழு!

திமுக கருத்துக் கேட்பு  கூட்டத்தில் கனிமொழி எம்.பி
திமுக கருத்துக் கேட்பு கூட்டத்தில் கனிமொழி எம்.பி

திமுக எம்.பி கனிமொழி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தூத்துக்குடியில் பொதுமக்களிடம் கருத்துக்களைக் கேட்டனர்.

திமுக கருத்துக் கேட்பு கூட்டம்
திமுக கருத்துக் கேட்பு கூட்டம்

2024-ல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேசிய கட்சிகள் முதல், மாநில கட்சிகள் என பலரும் தங்கள் தேர்தல் அறிக்கைகளைத் தயாரித்து வருகின்றனர். மக்களின் கவரும் நோக்கில் பல்வேறு திட்டங்களை, சலுகைகளை இந்த தேர்தல் அறிக்கைகளில் எதிர்பார்க்கலாம்.

இதற்கான அனைத்து கட்சிகளும் அறிக்கை தயாரிப்பு குழுவை நியமித்துள்ளது. திமுகவில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., எழிலரசன் எம்எல்ஏ., எம்.எம்.அப்துல்லா எம்.பி., மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்எல்ஏ., மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

திமுக கருத்துக் கேட்பு கூட்டம்
திமுக கருத்துக் கேட்பு கூட்டம்

இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் அறிக்கைக்கான கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், கனிமொழி தலைமையிலான குழுவினர் இன்று தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். முதல் நாளான இன்று தூத்துக்குடிக்கு சென்றுள்ள அந்த குழுவினர், மாணிக்கம் மஹாலில் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டு வருகின்றனர்.

இதில், விவசாயிகள், ஆசிரியர்கள், தொழில்முனைவோர், வியாபாரிகள், குடும்பத் தலைவிகள் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களைக் கேட்டறிந்து வருகின்றனர். ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!

'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?

கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!

நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!

நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in