திக்விஜய சிங்கை பாகிஸ்தானுக்கு பேக்கிங் செய்து விடுவோம்... பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங்
காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங்

தேர்தல் முடிந்ததும், முன்னாள் முதல்வரான திக் விஜய சிங்கை பாகிஸ்தானுக்கு அனுப்பி விடுவோம் என மத்தியப் பிரதேச பாஜக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை வெடித்துள்ளது.

திக்விஜய சிங், ரோட்மல் நாகர்
திக்விஜய சிங், ரோட்மல் நாகர்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமானவர் திக் விஜய சிங். இவர், அம்மாநிலத்தில் உள்ள ராஜ்கர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் ரோட்மல் நாகர் என்பவர் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் ராஜ்கர் மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ள பயோரா சட்டப் பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ- ராமேஷ்வர் சர்மா, நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “பயோரா பேரவைத் தொகுதியில் மட்டும் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கட்சி வேட்பாளரான ரோட்மல் நாகரை வெற்றி பெறச் செய்ய பாஜக தொண்டர்கள் உறுதி பூண்டுள்ளனர்.

பாஜக எம்எல்ஏ- ராமேஷ்வர் சர்மா
பாஜக எம்எல்ஏ- ராமேஷ்வர் சர்மா

இங்கு சுற்றி கொண்டிருக்கும் ராஜாவுக்கு (திக்விஜய சிங்) ஹிந்துஸ்தானில் இடமில்லை. தேர்தலுக்குப் பின் அவர் இஸ்லாமாபாத் அல்லது லாகூரில் இருக்கும் வகையில் பேக்கிங் செய்து அனுப்பப்படுவார். ஏனெனில் அவரை விரும்புபவர்கள் மத்தியப் பிரதேசத்திலும், நாட்டிலும் இல்லை. அவர்கள் எல்லையைத் தாண்டி (பாகிஸ்தானில்) இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் (பாகிஸ்தானியர்கள், திக்விஜய சிங்) ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள்” என்றார்.

எம்எல்ஏ- ராமேஷ்வர் சர்மாவின் இந்த கருத்து அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பதிலளித்த திக்விஜய சிங், “ நான் இதைப் பற்றி புதிதாக எதுவும் பேச விரும்பவில்லை.

திக்விஜய சிங்
திக்விஜய சிங்

இதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவரது கருத்தை எனது வழக்கறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்” என்றார்.

கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் திக்விஜய சிங் போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். அதில் பாஜகவின் பிரக்யா சிங் தாக்கூரிடம் தோல்வியடைந்தார். இருப்பினும், ராஜ்கர் தொகுதியில் கடந்த 1984, 1991 ஆகிய தேர்தல்களில் திக்விஜய சிங் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...   


லாலுவின் 2 மகள்களுக்கு வாய்ப்பு... பீகாரில் 22 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது ஆர்ஜேடி!

சத்தீஸ்கரில் 50 அடி பள்ளத்திற்குள் பேருந்து கவிழ்ந்து 12 தொழிலாளர்கள் பலி... பிரதமர் மோடி இரங்கல்!

ஈபிஎஸ் நண்பர் வீட்டில் 7 மணி நேரம் ஐ.டி ரெய்டு...2 பெட்டிகளில் ஆவணங்களை அள்ளிச் சென்றனர்!

திருமாவளவன் வீட்டில் ஐ.டி அதிகாரிகள் திடீர் சோதனை...சிதம்பரத்தில் சிறுத்தைகள் குவிந்ததால் பரபரப்பு!

நள்ளிரவில் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு... கோவையில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in